Jothi based on true events !
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஜோதி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் – ல் நடைபெற்றது. அங்கு பத்திரிக்கையாளர்களுக்கு ஜோதி படத்தை திரையிட்டனர். படம் முடியும் வரை மிகவும் அமைதியுடன் பார்த்துக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள், காட்சி முடிவில் பலத்த கரகோஷம் எழுப்பினர். அதுவே ஒரு நல்ல படத்திற்கான அடையாளமாக காணப்பட்டது. ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் வெளியே வரும்போது திரைப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களையும், ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களையும் வாழ்த்தி இது மிகச்சிறந்த திரைப்படம் என பாராட்டு தெரிவித்தனர். பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா, இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், துணை நடிகர் ஹரி க்ரிஷ், தயாரிப்பாளர் SP ராஜா சேதுபதி மற்றும் இந்த உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்மணி அந்த குழந்தையோடு குடும்பத்தாருடன் கலந்துகொண்டார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா கூறியதாவது, இப்படம் ஒரு உண்மை சம்பவம் மட்டுமில்லாமல் பல உண்மை சம்பவங்களை உள்ளடக்கியது. வருஷத்துக்கு 40