Nayansai - from modelling to acting
தமிழில் வலம் வர விரும்பும் மாடல் அழகி நயனசாய் 2019 இல் வெளியான கன்னட திரைப்படமான ஒம்பத்தனே அத்புதா என்ற படத்தில் நாயகியாக அறிமுகமான நயனசாய் மாடல் துறையிலும் பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் 2016ஆம் ஆண்டு மிஸ் கிளாம் இந்தியா என்ற விருதினையும் 2017ஆம் ஆண்டில் மிஸ் சவுத் இந்தியா விருதும் அதே ஆண்டில் மிஸ் பிரின்சஸ் கர்நாடகா ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும் இவர் விளம்பரத்துறை களிலும் பணியாற்றியுள்ளார் தற்போது இவர் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.