கல்யாண் ராமின் நடிப்பில் தயாராகி இருக்கும் பீரியாடீக் ஸ்பை திரில்லர் திரைப்படமான 'டெவில்' நவம்பர் 24ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.


நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் - தன்னுடைய தொழில் முறையிலான திரையுலக வாழ்க்கை பயணத்தின் தொடக்க நிலையிலிருந்து தனித்துவமான திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்றவர். இவருடைய கதை தேர்வில் மற்றொரு சுவாரசியமான திரைப்படத்தை ரசிகர்களுக்காக வழங்குகிறார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தை குறிக்கும் வகையில் 'டெவில்' என பரபரப்பாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம், பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் செயல்பட்ட ரகசிய உளவாளி என்ற கோஷத்துடன் வருகிறது.



'டெவில்' படத்தின் பிரத்யேக காணொளி அண்மையில் வெளியிடப்பட்டது. இது படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் இருந்தது.

படத்தினைப் பற்றிய புதிய தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி இன்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 


இதனை தயாரிப்பாளர்கள் 'நவம்பர் 24 2023 டிகோடிங்' என எழுதப்பட்ட ஒரு வசீகரமான மற்றும் பிரத்யேகமான போஸ்டரை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தில் கதையின் நாயகனான கல்யாண் ராம் - ஒரு மர்மத்தை தீர்க்கும் புதிரான பிரிட்டிஷ் ரகசிய ஏஜெண்டாக நடிக்கிறார். கடந்த ஆண்டு தெலுங்கு திரையுலகில் 'பிம்பிசாரா' எனும் படத்தின் மூலம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற கல்யாண் ராம், சுவராசியமான படத்துடன் மீண்டும் வருகை தந்திருக்கிறார்.



இந்த திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் இந்தியிலும் வெளியாகிறது. இதற்காக தயாரிப்பாளர்கள் அண்மையில் இந்தி பதிப்பின் காணொளியை வெளியிட்டனர். இது மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த திரைப்படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தேவன்ஷ் நாமா வழங்கும் இந்த திரைப்படத்தை அபிஷேக் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஷேக் நாமா தயாரித்திருக்கிறார். 


நவீன் மேடாராம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'டெவில்' எனும் இந்த திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீகாந்த் விசா எழுதியுள்ளார். எஸ். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்திருக்கிறார். பீரியாடிக் ஸ்பை த்ரில்லர் படம் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

Popular posts from this blog

Movie Review : Mathimaran

Movie Review: Maal

Music Director Vidyasagar’s son Harsha Vardhan U makes musical debut in Sibi film!