Grand Indra film audio launch held!

இந்திரா திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா JSM Movie Production, Emperor Entertainment நிறுவனங்கள் சார்பில், தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக் தயாரிப்பில், இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் நடிப்பில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் இந்திரா. சீரியல் கொலை பின்னணியில் மிரட்டலான திரைக்கதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தனியார் மாலில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்களுடன், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்.., இசையமைப்பாளர் அஜ்மல் பேசியதாவது… இந்தப்படத்தின் கதை சொன்ன போதே சவாலாக இருக்கும் என்று தோன்றியது. ஷூட் முடித்துத் தந்த போது, எல்லோருடைய நடிப்பு, தொழில்நுட்ப குழுவின் உழைப்பைப் பார்த்த போது, அட்டகாசமாக இருந்தது. நாமும் நிறைய உழைக்க வேண்டும் என்று தோன்றியது. உயிரே பாடல் எனக்கு மிகப் பிடித்த பாடல...