எஸ்,ஜே.சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடிய* ஜப்பானிய *ரசிகைகள்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து ஜப்பானிய ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக மாறிய எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவிலிருந்து முதன்முதலாக ஜப்பான் வரை சென்று தனது படங்களால், நடிப்பால், ஸ்டைலால் அங்குள்ள ரசிகர்களையும் வசியப்படுத்தியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், ஒவ்வொரு பட ரிலீஸின் போதும் ஜப்பான் ரசிகர்கள் அதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருவதையும் ரஜினிகாந்த் நடித்த படங்களை பார்ப்பதற்காகவே ஜப்பானிய ரசிகர்கள் சென்னை வந்து செல்வதையும் கூட பல வருடங்களாக நாம் பார்த்து வருகிறோம். அதற்கு அடுத்ததாக தற்போது அப்படி ஒரு அன்பை நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே சூர்யா பெற்றுள்ளார் என்பதுதான் பிரமிப்பூட்டும் தகவல். சமீப வருடங்களாக எஸ்.ஜே. சூர்யா தேர்ந்தெடுத்து நடிக்கும் வித்தியாசமான கதைகளாலும் கதாபாத்திரங்களாலும், அவரது தனி ஸ்டைலான நடிப்பினாலும்.. அவருக்கு பான் இந்தியா என்கிற எல்லையையும் தாண்டி தற்போது வெளிநாடுகளிலும் ரசிகர் வட்டம் உருவாகி உள்ளது. அந்த வகையில் ஜப்பானில் உள்ள நகோயா என்கிற பகுதியில் வசிக்கும் எஸ்.ஜே சூர்யாவின் தீவிர ஜப்பானிய ரசிகர், ரசிகையர்கள் சமீ...