Santhanam's Sabhaapathy readies for release!
RK Entertainment சார்பில் R. ரமேஷ்குமார் தயாரிப்பில் நடிகர் சந்தானம் நடிப்பில் கலகல காமெடியில், கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் சபாபதி. வரும் நவம்பர் 19 திரையில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படபிரபலங்கள், பத்திரிக்கை ஊடக நண்பர்கள் கலந்து கொள்ள இனிதே நடைபெற்றது.
*இவ்விழாவில் நடிகர் புகழ் பேசியதாவது…*
இந்தப்படத்தில் வாய்ப்பு கிடைத்ததே மிக சுவாரஸ்யமான அனுபவம். விஜய் டிவியில் ஒரு ஷீட் முடித்து விட்டு, வந்து கொண்டிருக்கும்போது நண்பனிடம் இது தான் சந்தானம் அண்ணா ஆபிஸ் என சொல்லிக்கொண்டிருந்தேன், சரியாக அதே நேரத்தில் சந்தானம் ஆபிஸில் இருந்து போன் வந்தது. எப்போது ஆபீஸ் வர முடியும் என கேட்டார்கள் நான் கீழ தான் இருக்கிறேன் என சொன்னேன் அவர்கள் நம்பவில்லை பின்னர் மேலே ஆபிஸ் சென்றவுடன் ஆச்சர்யப்பட்டார்கள். சந்தானம் அண்ணா படத்தில் நடிப்பது எனக்கு ஆசிர்வாதம். எப்போது வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தேன். சந்தானம் அண்ணா நான் கார் வாங்கிய போது என்னை அழைத்து பாராட்டி, ஒரு கடவுள் சிலை தந்தார். எனக்கு சாமியை தந்ததும் அவர் தான் திரையில் முதலில் வாய்ப்பு தந்ததும் அவர் தான். எனக்கு எப்போதும் அறிவுரை தந்துகொண்டே இருப்பார். படத்தின் ஷ்ட்டிங்கில் என்னை வைத்து கலாய்ப்பார் என ஆவலாக இருந்தேன் பார்த்தால் அவருக்கு இதில் திக்குவாய் பாத்திரம். இயக்குநரை பார்த்தால் ஹாலிவுட் ஆள் போல் இருந்தார் ஆனால் வாப்பா என அழகு தமிழில் அழைத்தார். இந்தப்படம் முழுதுமே மிக சந்தோஷமான அனுபவமாக இருந்தது. எல்லோரும் இணைந்து மிக நல்ல படத்தை தந்துள்ளோம். உங்கள் அனைவருகும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.
*நடிகை ப்ரீத்தி வர்மா பேசியதாவது…*
இது எனக்கு அறிமுக படம். தமிழில் எனக்கு முதல் படம். சாவி பாத்திரத்தை என்னை நம்பி அளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்த படத்தில் அனைவருமே எனக்கு மிகச்சிறந்த ஒத்துழைப்பை தந்தார்கள். குறிப்பாக சந்தானம் சார் மிகச்சிறப்பாக என்னை பார்த்து கொண்டார். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
*நடிகர் சந்தானம் பேசியதாவது*
தயாரிப்பாளர் ரமேஷை எனக்கு சினிமாவுக்கு வருவதற்கு முன் கடைகளில் வேலை பார்க்கும் போதிருந்தே தெரியும். அவனுக்கும் எனக்கும் நிறைய கதைகள் இருக்கிறது. அவன் ஏத்தி விட்டு ஒரு முறை வேலையை விட்டுவிட்டேன். அப்புறமாக வந்து நீ அவசரப்பட்டுட்ட என்றான். இப்போது என்னை வைத்து படமெடுக்க வந்தான். டாக்குமெண்ட் எல்லாம் வைத்து தான் ஃபைனான்ஸ் புரட்டினான். இப்போது படம் முடிந்து ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. கடும் பணச்சிக்கல்கள் என்னிடம் வந்து வருத்தப்பட்டான் அவசரப்பட்டுட்டியோ என்றேன் அதிர்ந்து விட்டான். அப்புறம் ஆறுதல் சொன்னேன் அவனுக்கும் எனக்குமான நட்பு பெரிது. நிறைய கஷ்டப்பட்டுதான் இந்தப்படத்தை செய்துள்ளான். ஒரே ஷெட்யூலில் இப்படத்தை முடித்துள்ளோம். இப்படத்தை முடிக்க முழுக்காரணமாக இருந்து, இப்போது படத்தை பார்த்து நம்பு வாங்கி வெளியிடும் அன்புச்செழியன் அவர்களுக்கு நன்றி. இந்தப்படத்திற்கு உயிர் கொடுத்திருப்பது இசையமைப்பாளர் சாம் CS தான். மிக அற்புதமான இசையை தந்திருக்கிறார். இப்படத்தில் விதி ஒரு பாத்திரமாக வரும் அது ஒவ்வொருவர் வாழ்க்கையில் எப்படி விளையாடுகிறது என்பது தான் படம். அந்த விதிக்கு இசையால் ஒரு வடிவம் தந்திருக்கிறார். இயக்குநர் ஶ்ரீனிவாச ராவ் இப்படத்தின் கதையை ஐந்து வருடங்களுக்கு முன்பே என்னிடம் சொல்லி விட்டார். 10 வருடங்களாக இந்தகதையுடன் வாழ்ந்துள்ளார். இது என் படமாக இருக்காது சபாபதியின் கதையாக தான் இருக்கும். அவர் அந்தளவு உருகி உருகி இப்படத்தை செதுக்கியுள்ளார். ஒரு வசனத்தில் ஒரு எழுத்தை கூட மாற்ற விட மாட்டார். எனக்கே இப்படம் புதிதாக இருந்தது. இப்படத்தில் நாயகிக்காக பலரை ஆடிசன் செய்தோம் இறுதியா வந்தவர் தான் ப்ரித்தி வர்மா. மிக அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். புகழை எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்தப்படத்தை தயவு செய்து எங்கள் இருவரின் காமெடியை எதிர்பார்த்து வராதீர்கள் இது சபாபதி கதையில் அந்த பாத்திரங்கள் காமெடி செய்தால் என்ன இருக்குமோ அப்படிதான் இருக்கும். புகழுடன் இன்னும் நிறைய படங்கள் செய்ய வேண்டும். இப்படத்தில் கணபதி ஐயர் எனும் ஒரு பாத்திரம் உள்ளது என்னை விட அந்த பாத்திரம் தான் ரொம்ப முக்கியமானது அதற்கு சரியான ஆள் கிடைத்தால் மட்டுமே இந்தப்படத்தை எடுக்க வேண்டும் என முடிவு செய்திருந்தோம். எம் எஸ் பாஸ்கர் மிக அற்புதமாக அதை செய்து காட்டினார். இந்தப்படம் அவருக்கு மிக முக்கியமான படமாக இருக்கும். ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம். இந்த போஸ்டர் பற்றி பிரச்சனை வந்தது ஒரு போஸ்டரை வைத்து கதையில் என்ன சொல்ல வருகிறார்கள் என முடிவு செய்ய முடியாது படத்தை பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும். இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு படமாக இருக்கும் அனைவரும் தியேட்டரில் போய் படம் பாருங்கள் நன்றி.