வெலோனி' யார்?'வதந்தி' வலைதளத் தொடரில் அறிமுகமாகும் நடிகை சஞ்சனா


அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் கிரைம் திரில்லரான 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் தொடரில் சஞ்சனா என்ற நடிகை அறிமுகமாகிறார். இவர் யார்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும், பார்வையாளர்களிடத்திலும், திரையுலக ரசிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது.
அமேசான் பிரைம் வீடியோவில் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் வெளியாகும்  கிரைம் திரில்லர் வலைதள தொடர் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. பன்னடுக்கு மர்மங்களுடன் புதிர் தன்மை கொண்ட இந்த க்ரைம் திரில்லர் வலைதள தொடரை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் அமேசான் பிரைம் வீடியோ மகிழ்ச்சி அடைகிறது. சந்தாதாரர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் ஸ்ட்ரீமிங் சேவை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் பிரைம் வீடியோ தற்போது அதன் அசல் தொடரான 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'யை அளிக்கிறது. இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநர்களான புஷ்கர் - காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் ஆண்ட்ரூஸ் லூயிஸ் இயக்கியிருக்கும் கிரைம் திரில்லரான ' வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' என்ற வலைதளத் தொடரில் வெலோனி என்ற கதையின் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதுமுகம் யார்? என்பது குறித்து, பார்வையாளர்கள் வியப்புடன் காத்திருக்கிறார்கள். மேலும் தற்போது ரசிகர்களிடத்தில் வெலோனி யார்? என்பதே அவர்களின் மனதில் எழும் ஒற்றை வினா..!

இந்த கதாபாத்திரத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி என்ற இளம் பெண் நடித்துள்ளார். இவர் யூட்யூப் நட்சத்திரம். 'ஆஸம் மச்சி' என்ற தமிழ் யூட்யூப் சேனலில் வெளியான ' 90ஸ் கிட்ஸ் லவ் எ 2 கே கிட்' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர். விஷுவல் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டதாரியான இவர், சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதில் வல்லவர். ஓவியம் வரைவதிலும் ஆர்வம் கொண்டவர். சிறந்த உள்ளடக்கம் கொண்ட நிகழ்ச்சிகளை உருவாக்குவதில் பேரார்வம் கொண்ட சஞ்சனா, முன்னணி திரைப்பட இயக்குநர்களிடம் உதவியாளராக பணியாற்ற விரும்பினார். ஆனால் அவர் 'வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'யில் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க தெரிவாகி, நடிகையாக அறிமுகமாகிறார் .

வால் வாட்சர் ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், ஆண்ட்ரூஸ் லூயிஸ் இயக்கிய இந்த அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் தமிழ் தொடரில் எஸ். ஜே. சூர்யா, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, குமரன் தங்கராஜன், ஸ்ம்ருதி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தத் தொடர் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி அன்று பிரைம் வீடியோவில் 240 நாடுகளில் வெளியாகிறது. எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த கிரைம் திரில்லர் தொடர் தமிழில் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது.

Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Movie Review : Mathimaran

Film Review: 7G The Dark Story