Posts

Showing posts from September 1, 2025

மிராய் படத்தில் அதிவேக சண்டைக் காட்சிகள் உள்ளன - தேஜா சஜ்ஜா

Image
தேஜா சஜ்ஜா , மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்”. பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், தேஜா சஜ்ஜா பேசியபோது, “அனைவருக்கும் வணக்கம், இங்கு நான் வருகை தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிராய் திரைப்படம் இம்மாதம் 12ம் தேதி வெளியாகிறது. நீங்கள் அனைவரும் இதுவரை இப்படத்திற்காக கொடுத்த ஒத்துழைப்பை மேலும் தருவீர்கள் என்று நம்புகிறேன். ஆக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, எமோஷன் மற்றும் டிவோஷன் நிறைந்த படம் தான் மிராய். ஒரு வருடத்தில் சில படங்களே திரையரங்கில் பார்க்கும் படியாக வெளியாகின்றன; அந்த வரிசையில் மிராய் படமும் இருக்கும். 3 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள். பீபிள் மீடியா பேக்டரி நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறேன்; இன்னும் பல முறை இணைய ஆசைப்படுகிறேன். எங்களை நம்பியதற்காக விஷ்வா சாருக்கு நன்றி. இயக்குனர் கார்த்திக் கட்டம்னேனி அவர்களால் தான் இது சாத்தியமானது. அவருடைய திரைக்கதை தான...