ஆச்சர்யங்களை அள்ளித்தெளிக்கும் அசத்தலான LIK ( 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ) திரைப்பட டீசர் !

பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK ( 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ) திரைப்படத்தின் அசத்தலான டீசர் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK ( 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ) திரைப்படத்தின் டீசர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. இப்படம் 2025 வருட தீபாவளிக் கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி ரசிகர்களை மகிழ்விக்க திரைக்கு வருகிறது. அனிருத் குரலில், 2040 ஆம் ஆண்டில் கண்கவரும் உலகத்தில் ஆரம்பிக்கும் டீசர், பல ஆச்சரியங்களை அள்ளித் தருகிறது. காதல் அரிதான பொருளாகிவிட்ட காலத்தில், காதலுக்கே இன்ஸூரன்ஸ் கம்பெனி இருக்கும் ஒரு காலகட்டத்தில், ஒருவன் தன் காதலை காப்பாற்ற என்ன செய்யப் போகிறான் என விரியும் டீசரின் ஒவ்வொரு ஃப்ரேமும், வேறொரு உலகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. அனிருத்தின் சிக்னேச்சர் ஆல்பம் பாடலான “எனக்கென யாருமில்லையே” பாடல் டீசரின் முடிவில் வருவது ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது. இதுவரை தமிழ்...