வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு வேர்ல்ட் கப் கிடைத்தது போல் உள்ளது - நடிகர் பாலா

ஜெய் கிரண் தயாரிக்க, இயக்குனர் ஷெரிஃப் இயக்க, பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் காந்தி கண்ணாடி. இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகை அர்ச்சனாவும் , இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது : தயாரிப்பாளர் ஜெய் கிரண் பேசும் போது, அனைவருக்கும் வணக்கம். என்னுடைய அப்பா ஸ்தபதி. 50 வருடங்களாக கோவில் கட்டும் பணியில் இருக்கிறார். அவருடைய 13 வயதிலிருந்து இந்த பணியை செய்து கொண்டிருக்கிறார். அவர் தேசிய விருது வாங்கும் போது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. நான் அவருடன் இணைந்து பல வேலைகள் செய்து இருக்கிறேன். இப்போது இப்படத்தை தயாரித்திருக்கிறேன். பலர் என்னிடம், ஆம்புலன்ஸ்-ஐத் தொடர்ந்து காந்தி கண்ணாடி என்று கேட்கிறார்கள். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த இரண்டு படங்களுமே வெவ்வேறு கதை அம்சம் கொண்ட படங்கள். பாலாவை பொறுத்தவரை கேப் டிரைவராக இருந்தாலும் சரி, சிறிய கடை வைத்திருந்தாலும் சரி அவர் செய்ய வேண்டிய உதவிகளை செய்து கொண்டு தான் இருப்பார் என்றார். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் ப...