SR Prabhakaran's KVS festive Pongal release!

 இயக்குநர் SR பிரபாகரன் இயக்கத்தில் “கொம்பு வச்ச சிங்கம்டா”  திரைப்படம் கதைச்சுருக்கம்


மத்திய தமிழகமான கரூர் மாவட்டத்தில் நடக்கும் கதை.

ஒரு பெரும் கிராமமான கிருஷ்ணராயபுரம் ஊரின் பெரியவர் தெய்வேந்திரன். அந்த கிராமத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் பிடித்தமானவரான தெய்வேந்திரனின் சொல்லுக்கு ஊரே கட்டுப்படும். அப்படிப்பட்ட தெய்வேந்திரனின் ஒரே மகனுக்கு, ஐந்து நண்பர்கள். “மண்ணு தின்ற வயசுல இருந்து ஒன்னா திரிஞ்ச பயலுக” சாதி மத வேறுபாடின்றி பழகும் இவர்களின் நட்புக்குள், ஊரில் நடக்கும் உள்ளாட்சி தேர்தல் பிரிவினையை ஏற்படுத்துகிறது. இரண்டு அணிகளாக பிரிந்த இவர்களது நட்புக்குள் என்ன நடந்தது. ஒன்றாய் பிறக்கவில்லை என்றாலும் ஒன்றாய் வளர்ந்த இவர்களின் நட்பின் வாழ்வு தனை சூது கவ்வியது. மீண்டும் நட்பு வென்றதா? என்பதே ‘கொம்பு வச்ச சிங்கம்டா’  படத்தின் கதை.


நடிகர்கள் 


பெரியவர் மகனாக - நடிகர் சசிகுமார்


சசிக்குமார் ஜோடியாக தமிழ்ச்செல்வி பாத்திரத்தில் மடோனா செபாஸ்டியன் நடித்திருக்கிறார்.


ஊர்ப் பெரியவர் தெய்வேந்திரனாக மறைந்த இயக்குநர் மகேந்திரன் நடித்திருக்கிறார்.


சசிகுமாரின் உயிர்நண்பனாக சூரி நடித்துள்ளார்.


மற்றும் 

ஹரீஷ் பேராடி, தயாரிப்பாளர் இந்தர்குமார், ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ‘பிச்சைக்காரன்’ தீபா ராமானுஜம், ‘மருது’லீலா பாட்டி, நண்பர்களாக ராகவ் விஜய், அபி சரவணன், சந்தோஷ் கிருஷ்ணன், லோகு, அருள்தாஸ், சங்கிலி முருகன், ஶ்ரீபிரியங்கா, ரஞ்சனா நாச்சியார் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.


ஒளிப்பதிவு - NK ஏகாம்பரம் 

இசை - திபு நிணன் தாமஸ் 

எடிட்டிங் - டான் போஸ்கோ

பாடல் - யுகபாரதி, G.K.B,அருண் ராஜ் காமராஜ்

சண்டைப்பயிற்சி - அன்பறிவு

நடனம் - நந்தா 


கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - SR.பிரபாகரன்


தயாரிப்பு - இந்தர்குமார்

Popular posts from this blog

Karthi blessed with baby boy !

Brindha Shivakumar dubs for Alia Bhatt in Brahmastra Tamil version!

Web Series Review - Ayali