கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 06.11.2025 அன்று நடைபெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குனர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது நடிகை ஸ்ரீதா ராவ் பேசும்போது, என்னுடைய கனவு நனவானதில் மகிழ்ச்சி. இயக்குனர் பிரபு சாலமன் சாரிடம் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. காட்டில் படப் பிடிப்பு நடத்தும் போது வெளிச்சம் இருக்காது. கைபேசியில் நெட்வொர்க் இருக்காது. இதுபோன்ற பல பிரச்னைகளுக்கு இடையில் படத்தில் பணியாற்றியிருக்கிறோம். நாயகன் மதி மிகவும் உறுதுணையாக இருந்தார். சுகுமாரின் ஒளிப்பதிவைப் பார்க்கும்போது அழகான கனவு போல இருக்கும். லிங்குசாமி சார், போஸ் சார் மற்றும் அனைவருக்கும் நன்றி என்றார். இயக்குனர் நிதிலன் பே...