“திரைக்கதைதான் ஹீரோ” – புதிய முயற்சியுடன் இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்!
Production No. 2 – இயக்குநர் சிவநேசனின் இயக்கத்தில் ஸஸ்பென்ஸ் த்ரில்லர் ‘காளிதாஸ்’ (2019) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, Incredible Productions தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையாய் கொண்ட இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம், ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தின் மூலம் ‘நாளைய இயக்குனர்’ (Season 1–4) நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் கூறுகையில்: “இந்த படத்தில் திரைக்கதையே ஹீரோ. ரசிகர்களை கடைசி வரை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கதை இது,” என தெரிவித்தார். இப்படத்தில் கிஷோர், சார்லி, சாருகேஷ் (HeartBeat புகழ்), வினோத் கிஷன், மற்றும் ஷாலி நிவேகாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தொழில்நுட்பக் குழு தயாரிப்பு : சிவநேசன் S (Incredible Productions) இயக்குநர்: சிவநேசன் S (காளிதாஸ் 1 தயாரிப்பாளர்) இசை: விஷால் சந்திரசேகர் ஒளிப்பதிவு: சுரேஷ் பாலா படத்தொகுப்பு: புவன் சீனிவாசன் கலை இயக்குனர் - M.மணிகண்டன் B.F.A., புரொடக்ஷன் எக்ஸிகூயுடிவ்...