எஸ்.எஸ். ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும், இன்னும் தலைப்பிடப்படாத மாபெரும் திரைப்படம் “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !
பாகுபலி மற்றும் RRR என இரண்டு உலகளாவிய பிளாக்பஸ்டர் வெற்றிகளுக்குப் பிறகு, மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிப்பில், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரியதாக உருவாகி வரும் புதிய படம் — “Globe Trotter”. நீண்ட நாட்களாக காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது! ரசிகர்களின் மனதை மயக்கும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, மகேஷ் பாபு நடிப்பில், உருவாகும் மாபெரும் படைப்பிலிருந்து பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள கும்பா (KUMBHA) கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே – தீவிரமானதாகவும், சக்திவாய்ந்ததாகவும், சினிமா அழகியலோடும் அமைந்துள்ளது. இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் முதல் அம்சமாக, வில்லனாக நடிக்கும் பிரித்விராஜ் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் “Globe Trotter” எனும் உலகில் “கும்பா”வாக மாறியுள்ளார். இந்தப் படத்தில் அவர் இதுவரை நாம் பார்த்ததற்கு மாறாக, கொடூரமான, இரக்கமற்ற, கட்டுப்படுத்து...