Grand Kiss Pre -release event held!

'கிஸ்' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு! ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், சதீஷ் இயக்கத்தில், நடிகர்கள் கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிஸ்'. செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் பேசியதாவது, "படம் ஜாலியாக இருக்கும். நாங்களும் ஜாலியாக வேலை பார்த்தோம். தியேட்டரில் படம் பார்க்கும்போது உங்களுக்கும் பிடிக்கும்" என்றார். எடிட்டர் ஆர்.சி. பிரணவ், "இந்த வாய்ப்புக் கொடுத்த ராகுல் சாருக்கு நன்றி. இரண்டு வருடங்கள் இந்தப் படத்தில் ரொம்பவே ஜாலியாக வேலை பார்த்தோம். சதீஷ், கவின் எல்லோரும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். ஃபேமிலி எண்டர்டெயினராக படம் உருவாகி இருக்கிறது" என்றார். கலை இயக்குநர் மோகனம் மகேந்திரன், "ஜாலியான டீமாக சேர்ந்து எல்லோரும் நல்ல படம் எடுத்திருக்கிறோம். எல்லோரும் 'தி பெஸ்ட்' கொடுத்திருக்கிறார்கள். அது டிரெய்லர் பார்க்கும்போதே உங்களுக்கு தெரிந்திருக்கும். படம் நிச்சயம் வெற்றி பெறும்". நடிகர் ஷக்தி, "கவின் அண்ணாவுடன...