Posts

Showing posts from October 10, 2025

இசைஞானி இளையராஜா அவர்கள் இசை மழையில் "தேசிய தலைவர்"

Image
  SSR சத்யா பிக்சர்ஸ் வழ ங்கும் *இசைஞானி இளையராஜா* அவர்கள் இசை மழையில்  SSR சத்யா Bsc.,M.A,Mphil., LLB, ஜெனிபெர் மார்கிரட் MA. B.Ed.. அவர்கள் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கும் பசும்பொன் சித்தர் ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று காவியம் *தேசிய தலைவர்*  இசை முன்னோட்டம் இன்று (10/10/25) சிறப்பாக நடந்தேறியது..*கலைப்புலி எஸ்.தாணு* அவர்கள் முன்னிலையில் *மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா* அவர்கள் குறுந்தகடை வெளியிட *இளையதிலகம் பிரபு* அவர்கள் பெற்று கொண்டு சிறப்பித்தார்கள்...  தேசிய தலைவர் தேவராகவே வாழ்ந்திருக்கும் வரலாற்று நாயகன் *ஜே.எம்.பஷிர்* தேவர் தோற்றத்திலேயே விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது அனைவரின் பராட்டுதலையும் பெற்றது குறிப்பிடத்தக்கது... இயக்கம் - *ஆர்.அரவிந்த்ராஜ் B.A,Df.Tech.* சிறப்பு விருந்தினராக  திரு V. பழனிவேல் திரு.மூர்த்தி தேவர், திரு ராஜ் மோகன்,  திரு.ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் கலந்து கொள்ள இசை முன்னோட்டம் வெளியிடப்பட்டது..

மெண்டல் மனதில் ஆல்பம் ரொம்பவே ஸ்பெஷல் - ஜீ. வி பிரகாஷ் பெருமிதம் !

Image
  செல்வராகவன் - ஜீ வி பிரகாஷ் குமார்  கூட்டணியில்,  ரசிகர்களை மயக்கவுள்ள  ‘மெண்டல் மனதில்' பட பாடல்கள் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, மாறுபட்ட ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகி வரும் படம் 'மெண்டல் மனதில்'. இப்படத்தின் பாடல்கள் குறித்து ஜீவி பிரகாஷ் பெருமிதமாக பகிர்ந்த தகவல் ரசிகர்களை  உற்சாகப்படுத்தியுள்ளது. ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா எக்சிக்யூட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  ஜீ. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார். முன்னதாக “ஆயிரத்தில் ஒருவன்” மற்றும் “மயக்கம் என்ன” என ...