குஷி - 2 வில் விஜய் சார் மகன் நடிக்க வேண்டும்; எஸ். ஜே. சூர்யா இயக்க வேண்டும்! - தயாரிப்பாளர் ஏ. எம். ரத்னம்

குஷி மறுவெளியீடு, பல கோடி வசூலாகும் - விநியோகஸ்தர் சக்தி வேலன் சினிமாவில் நான் அடுத்த கட்டத்திற்கு செல்ல காரணம் ஏ. எம். ரத்னம் சார் தான் - எஸ். ஜே. சூர்யா ஏ.எம்.ரத்னம் தயாரித்து, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படம் குஷி. தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கில் செப்.26ஆம் தேதி வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சக்திவேலன் விநியோகம் செய்கிறார். அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கலைஞர்கள் பேசியதாவது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேசும்போது, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் குஷி படத்தை பார்த்து சந்தோஷப்படுவார்கள் என்று நம்புகிறேன். எடிட்டர் விஜயன் என்னிடம், வாலி படம் நன்றாக இருக்கிறது. அஜித் சார் சூர்யாவிற்கு பைக் வாங்கி கொடுத்திருக்கிறார் என்று கூறினார். நான் உடனே சூர்யாவை தேட ஆள் அனுப்பினேன். நாயகனாக யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யுங்கள், எனக்கு இயக்குனர் தான் முக்கியம் என்று கூறினேன். அதன்பிறகு விஜய் சாருக்கு கதை கூறினோம். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மூன்று மொழிகளிலும் சூர்யா தான் இயக...