'ரெட் லேபில்' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விழா !
இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில், முனிஷ்காந்த் நடிக்க,தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த 'ரெட் லேபில்' படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது. *இந்த விழாவில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, இயக்குநர்கள் எழில், வசந்தபாலன், மித்ரன் ஜவஹர், நடன இயக்குனர் ஸ்ரீதர், அனுமோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.* *விழாவில் கதாசிரியர் பொன். பார்த்திபன் பேசும்போது,* "தயாரிப்பாளர் முதலில் என்னிடம் கதை கேட்டார். நான் இரண்டு கதைகளைச் சுருக்கமாகச் சொன்னேன். அதில் ஒன்றை தேர்வு செய்தார். ஹாலிவுட்...