Posts

Showing posts from December 11, 2025

ZEE5 அடுத்த அதிரடி சீரிஸ் – ‘ஹார்டிலே பேட்டரி’ டிசம்பர் 16 முதல் தமிழில் ஸ்ட்ரீமிங் ஆகிறது!

  தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக, விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமாவான ‘ ஹார்டிலே பேட்டரி’ என்ற புதிய ஓரிஜினல் சீரிஸை ZEE5 வழங்குகிறது. நவீன காதலை புதிய கோணத்தில் ஆராய்கிறது—தர்க்கத்துக்கும் உணர்வுக்கும் இடையிலான எல்லைகளைத் தொட்டுப் பார்க்கும்  இந்த சீரிஸை  சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார்.குரு லக்ஷ்மன் ‘சித்’ ஆகவும், பாதினி குமார் ‘சோஃபியா’வாகவும் நடித்துள்ளனர். ‘ஹார்டிலே பேட்டரி’  சோஃபியா என்ற புத்திசாலி விஞ்ஞான ஆர்வலர் பற்றிய கதை. காதல் என்பது உயிரியல் மற்றும் வேதியியல் கலவையே தவிர வேறெதுவுமில்லை என்று எப்போதும் நம்புகிறவள். தனது பெற்றோர் உட்படப் பலர் அனுபவித்த தோல்வியுற்ற உறவுகளைப் பார்த்த பிறகு, காதலில் இருக்கும் குழப்பத்தை நீக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறாள்.தனது 16 வயதில், காதலின் உண்மைத்தன்மையை அறிவியல் ரீதியாக அளவிடும் ஒரு கருவியை உருவாக்க வேண்டும் என்ற கனவை ஆரம்பிக்கிறாள். 24-வயதில், அந்த கனவை நனவாக்குகிறாள் —ஆனால் அப்போது அவள் சந்திப்பது சித் என்ற காமிக் ரைட்டரை. சோஃபியாவின் கண்டுபிடிப்பு முற்றிலும் அர்த்தமற்ற...