Samantha in Dream Warrior's Romantic Fantasy next !

 டிரீம் வாரியர் பிக்சர்ஸ் 30வது படம்.

சமந்தா நடிக்கும் ரொமான்டிக் ஃபேண்டஸி திரைப்படம்


Dream warrior Pictures  நிறுவனம்,  தமிழ் திரையுலகில் மாறுபட்ட  தரமான படைப்புகளை வழங்கி வரும் மதிப்புமிகு நிறுவனம்.  ஜோக்கர்,  அருவி என மாறுப்பட்ட படைப்புகள் ஒரு புறம்,  காஷ்மோரா, கைதி, தீரன் அதிகாரம், NGK என கமர்ஷியல் கொண்டாட்டம் தரும் பல படங்களை தயாரித்து, தமிழ் திரையுலகில் அனைவராலும் பாராட்டு பெற்று வருகிறது.

Dream warrior Pictures தயாரிப்பில்  ரொமான்டிக் ஃபேண்டஸி வகையில் உருவாகவுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்குகிறார். இவர் #ஒருநாள்கூத்து டைரக்டர் நெல்சன் வெங்கடேசன் அவர்களிடமும், #கண்ணும்கண்ணும்கொள்ளையடித்தால் பட டைரக்டர் தேசிங்குபெரியசாமி அவர்களிடமும்  இணை இயக்குநராக பணியாற்றியவர். தமிழில் ஒரு புது முயற்சியாக, ஃபேண்டஸி ரொமாண்டிக் படமாக , பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து  இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. 


நடிகை சமந்தா இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் தெலுங்கு மொழிகளில் இப்படம் உருவாகிறது.  

Dream warrior Pictures  நிறுவனத்தில் நடிகை சமந்தா நடிப்பது இதுவே முதல் முறை. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Movie Review : Mathimaran

Film Review: 7G The Dark Story