Grand audio launch of Pandrikkku Nandri Solli !

 

"பன்றிக்கு நன்றி சொல்லி” திரைப்பட இசை வெளியீட்டு விழா!

சூது கவ்வும் திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி ஜானரில், புதுமுகங்களின் உருவாக்கத்தில், அசத்தலான காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள படம் தான் “பன்றிக்கு நன்றி சொல்லி” திரைப்படம். Head Media works தயாரித்துள்ள,  இப்படத்தை Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா, ABI & ABI Pictures  சார்பில் அபினேஷ் இளங்கோவன் மற்றும் இயக்குநர் நலன் குமாரசாமி இணைந்து வழங்குகிறார்கள். இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரை விருந்தினர்கள் பங்குகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. 

*நடிகர் நிஷாந்த் பேசியதாவது...*

இந்தப்படத்தில் வர விஜயன் தான் காரணம், அவனால் தான் இந்தப்படம் எனக்கு கிடைத்தது. இயக்குநர் பாலா ஒரு இயக்குநராக இல்லாமல் அனைத்து துறைகளிலும் வேலை செய்திருக்கிறார். இங்கு இருக்கும் அனைவருமே எல்லார் வேலையையும் கலந்து,  இணைந்தே செய்தோம். இப்படத்திற்காக இவ்வளவு பெரிய மேடையை பார்ப்போம் என யாரும் நினைக்கவில்லை. இதற்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி

*இயக்குநர் கல்யாண் பேசியதாவது..*

இந்தப்படம் டிரெய்லர் நன்றாக இருந்தது, இந்தப்படம் சேர வேண்டிய இடத்தை சேர்ந்ததால் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும், நலன் குமாரசாமி ஒரு படத்தை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 

*இயக்குநர் ARK சரவணன் பேசியதாவது...*

இந்தப்படத்தை முன்னதாகவே பார்த்துவிட்டேன். படம் அட்டகாசமாக இருக்கும், இப்படம் எடுக்க  நலன் தான் காரணம் என இயக்குநர் சொன்னார். என் படம் எடுக்கவும் அவர் தான் முன்னுதாரணமாக இருந்தார். இந்தப்படம் புதிய முகங்களின், கடுமையான உழைப்பில் உருவாகியுள்ளது. அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் அனைவரும் பாருங்கள் நன்றி. 

*இயக்குநர் கேபிள் சங்கர் பேசியதாவது*

தம்பி நிஷாந்த் மூலம் தான் இந்தப்படத்தை பார்த்தேன்.படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை என்று சொன்னார்கள். பின் நான்  இப்படத்தை CV குமாரிடம் அறிமுகப்படுத்தினேன். இப்போது இப்படம் பெரிய அளவில் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி. ஒரு நல்ல படம் எடுத்தால் எப்படியாவது அதற்குரிய இடத்தை அப்படம் பெற்றுவிடும், என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம். இப்படம் சூது கவ்வும் படத்தை போல் அனைவரையும் கவரும் நன்றி. 

*இயக்குநர் நலன் குமாரசாமி பேசியதாவது...*

2 வருஷம் முன்னாடி டிரெய்லர் மட்டும் காட்டினார்கள் அப்போது பெரிதாக அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை, இந்தப்படத்தை ரிலீஸ் செய்யும் ஞானவேல் சாருக்கு நன்றி. நாங்கள் குறும்படத்தில் செய்ததை முழு நீளப்ப்படமாக செய்யும் டெக்னாலஜி இப்போது வந்திருக்கிறது. ஆனால் இம்மாதிரி  புதிய முயற்சியில் வெளியாகும் படங்கள் சரியான அறிமுகத்தை பெற வேண்டும் அம்மாதிரியான அறிமுகத்தை இப்படம் பெற்றது மகிழ்ச்சி. 

*தயாரிப்பாளர் CVகுமார் பேசியதாவது...*

அட்டகத்தி எனக்கு மிகப்பெரிய பயணமாக இருந்தது.  அதுமாதிரி தான் இந்தப்படமும், இக்குழுவினருக்கு அமைந்துள்ளது. கேபிள் சங்கர் மூலம் தான் இந்தப்படம் பார்த்தேன். முதலில் நான் ரிலீஸ் செய்ய முயற்சித்தேன். அப்போதைய காலகட்டத்தில் அது முடியவில்லை பின்னர் ஞானவேல் ராஜா சாரிடம் படம் பார்க்க சொன்னேன். அவர் பார்த்து அவருக்கு பிடித்து, ரிலீஸ் செய்வது மகிழ்ச்சி. இப்படத்தின் பட்ஜெட் கேட்ட போது அதிர்ச்சியாக இருந்தது இந்த அளவு சின்ன பட்ஜெட்டில் எப்படி எடுத்தார்கள் என ஆச்சர்யமாக இருந்தது. இம்மாதிரி படங்கள் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 

*தயாரிப்பாளர்  KE ஞானவேல் ராஜா, பேசியதாவது...* 

8 வருஷம் முன்னால் நடந்த  அட்டகத்தி வெளியீடு போலவே, இந்த வெளியீடு அமைந்திருக்கிறது. அனைத்து இயக்குநர்களும் இங்கு வந்து இந்தப்படத்தை வாழ்த்தியுள்ளார்கள். இந்தப்படத்தில் அட்டாகசமாக உழைத்துள்ள அனைவரும், அட்டகத்தி படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது வளர்ந்திருப்பதை போல் மிகப்பெரிய அளவில் வளர்வார்கள். இந்தப்படக்குழுவினர் இணைந்து இன்னொரு படம் செய்ய வேண்டும், அதை இந்தப்படம் போல் மூன்று மடங்கு பட்ஜெட்டில் நான் தயாரிக்கிறேன் என்பதை இந்த மேடையில் நான் சொல்லிக்கொள்கிறேன். இந்தப்படம் முதலில்  பார்க்கபோகும்போது வேறொருவர் வாங்கிவிட்டார்கள் என்றார்கள் பின்னர் எங்கெங்கோ சுற்றி என்னிடம் வந்தது, இந்தப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. இந்த வகைப்படங்கள் எடுக்கும் அனைவருக்குமே உதாரணமாக இருப்பவர் நலன் தான். அவருடன் ஆர்யா நாயகனாக நடிக்க, அடுத்த மாதம் ஒரு படத்தை துவக்கவுள்ளோம். அது ரசிகர்களுக்கு பிரமாண்டமான புதிய  அனுபவமாக இருக்கும் நன்றி. 

*ABI & ABI Pictures சார்பில் நந்தினி அபினேஷ் பேசியதாவது..*

இந்தப்படத்தை எங்கள் நிறுவனத்தின் சார்பில் வெளிடுவது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் பணியாற்றியுள்ள அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. 

*தயாரிப்பாளர் அம்மா சிவா பேசியதாவது...*

படத்தில்  இருந்து நல்ல காட்சியை போட்டு காட்டினார்கள் அதுவே மிக சுவாரஸ்யமாக இருந்தது. இசையமைப்பாளருக்கு எனது வாழ்த்துக்கள், இந்த திரைப்படகுழு பெரிய அளவில் ஜெயிப்பார்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய அளவில் வெற்றிப்படங்களை தந்து வரும் ஞானவேல் ராஜாவுக்கு வாழ்த்துக்கள். 

*தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..*

ஒரு மாதத்திற்கு முன் இப்படத்தை பார்த்து நிறைய ஆச்சர்யப்பட்டேன். இது ஒரு அசத்தாலான படம்,  ஓடிடிக்காக பார்த்த அனைவரும் இப்படத்தை பாராட்டினார்கள். 2 மணி நேரம் எப்படி போகிறதென்பதே தெரியாமல் விறுவிறுப்பாக இருக்கும். இந்தப்படம் விமர்சர்களுக்கும் ரசிகர்களுக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். இனிவரும் தலைமுறைக்கு பேர் சொல்லும் படமாக “பன்றிக்கு நன்றி சொல்லி” படம் இருக்கும். இம்மாதிரி படங்கள் மக்கள் மத்தியில் சென்று சேர வேண்டும். ஊடகங்கள் இப்படத்தை பெரிய அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் நன்றி. 


 


Popular posts from this blog

Movie Review : Mathimaran

Movie Review: Maal

Music Director Vidyasagar’s son Harsha Vardhan U makes musical debut in Sibi film!