“மகேந்திரனுக்கு சவுத் இந்தியன் ஸ்டார் என்பது பொருத்தமான பட்டம் தான்” ; த்ரிகண்டா’ பட இயக்குநர் சிலாகிப்பு
SVM ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ த்ரிகண்டா . மணி தெலகுட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் மகேந்திரன் கதாநாயகயாக நடிக்க, ஷ்ரத்தா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். சாஹிதி அவான்சா இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார்.கல்லூரி வினோத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் & ஷாஜித் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இந்த படத்தில் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் கேபிள் சங்கர், ஹாரூண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் இயக்குநர் கேபிள் சங்கர் பேசும்போது, “படத்தின் டைட்டிலைப் பார்த்தபோது ஏதோ சின்ன பட்ஜெட் படமாக இருக்கும் என்று நினைத்தால் ட்ரைலரை பார்க்கும்போது பிரம்மாண்டமாக தெரிகிறது. இவர்கள் செய்திருக்கும் செலவு நன்றாகவே தெரிகிறது. அதுவே இந்த படம் ஒரு கமர்சியல் படமாக வரும் என்கிற நம்பிக்கையை கொடுக்கிறது. டிசம்பர் மாதம் என்பதால் இந்த வருடம் தமிழ் சினிமா எப்படி இருந்தது, லாபம் எவ்வளவு நட்டம் எவ்வளவு என ஒரு விவாதம் அனைவரிடமும் ஓடிக்கொண்டிருக்கிறத...