Red Giant to release Sundar C- Arya's Aranmanai 3 !

அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமையையும் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ்


இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்கியுள்ளார்.


தற்போது அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமைகளையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான போது இயக்குனர் சுந்தர்.C, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, கலைஞர் தொலைக்காட்சி CFO S.கார்த்திகேயன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா, Benzz Media CEO R.மதன்குமார் ஆகியோர் இருந்தனர்.


அரண்மனை 3 அக்டோபர் 14 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.



Popular posts from this blog

Web Series Review: Aindham Vedham

Movie Review : Virundhu

Film Review: 7G The Dark Story