ஆந்திர ரசிகர்களை மயக்கும் ஸ்ருதிஹாசன்

 


நடிகை ஸ்ருதிஹாசன் நடித்த  “3”படம் மீண்டும் ஆந்திராவில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்பை அனைவரும் பாராட்டும் நிலையில், ரசிகர்கள் ஸ்ருதிஹாசன் நடிப்பை கொண்டாடி வருகிறார்கள். 


உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, ஹாலிவுட்  என பல இடங்களிலும் கலக்கி வருகிறார். அழகு, நடிப்பு, நடனம், பாடல் என அனைத்திலும் சிறந்த திறமை கொண்டவர் ஸ்ருதிஹாசன். மிகவும் தேர்ந்தெடுத்து சிறந்த படங்களில் நடித்து ரசிகர் மனங்களை கொள்ளை கொண்டு வருகிறார். குறிப்பாக ஆந்திராவில் அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.


சமீபத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் 2012ல்  வெளியான  3  திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு ஆந்திராவில் மீண்டும் வெளியிடப்பட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் குறிப்பாக  நடிகை  ஸ்ருதிஹாசனின் நடிப்பை விமர்சகர்களும் பொதுப்பார்வையாளர்களும் பாராட்டி வருகிறார்கள். இதனால் உற்சாகமடைந்த ஸ்ருதிஹாசன் ரசிகர்கள் இதனை இணையத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகிறார்கள். 


தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் கே ஜி எப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Popular posts from this blog

Music Director Vidyasagar’s son Harsha Vardhan U makes musical debut in Sibi film!

Film Review : Thuritham

Film Review : Repeat Shoe