Rudra Thandavam announces October release!

 அக்டோபர் 01 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது  " ருத்ர தாண்டவம் "


G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும்இரண்டாவது படம் " ருத்ர தாண்டவம்" 

மோகன் G இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார்.

சின்னத் திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.



திரௌபதி படத்தை வெளியிட்ட 7 G ஃபிலிம்ஸ் சிவா

இந்த படத்தையும்  உலக முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார்.


இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரது பாராட்டை பெற்று தற்போது வரை  டிரெண்டிங்கில் உள்ளது. 




எப்போது படம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அக்டோபர் 01 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது என்று அறிவித்தது படக்குழு.




இந்த அறிவிப்பு ரசிகர்கள் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

Popular posts from this blog

Movie Review : Sirai

Movie Review : Parasakthi

Webseries Review : Heartiley Battery