ZEE5 மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது


~'கூச முனிசாமி வீரப்பன்' இந்தியாவின் மிகப்பிரபல வனக் கொள்ளைக்காரன்  வீரப்பனின்  வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும்  ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ஆகும்.  இந்த சீரிஸ் டிசம்பர் 8 ஆம் தேதி பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்பட உள்ளது~



இந்தியா, 23 நவம்பர் 2023: இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸின்  டிரெய்லரை இன்று வெளியிட்டது. இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூஸ் முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை  வழங்குகிறது. நிஜ வாழ்க்கைக் காட்சிகள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் வீரப்பனின் புதிரான ஆளுமை மற்றும் அவரது குற்ற பின்னணியைத் தெளிவாகச் சித்தரிக்கிறது. இந்த சீரிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில்,  அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது. அது மட்டுமல்லாது அவரைச் சுற்றி நடந்த பல நிகழ்வுகள் பற்றிய அறியப்படாத உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ஒரிஜினல் தமிழ் சீரிஸான ​​'கூச முனிசாமி வீரப்பன்' டிசம்பர் 8 முதல் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.  


மூன்று தசாப்தங்களாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளை வேட்டையாடிய மிகப்பிரபலமான நபரான வீரப்பன், சிறப்பு அதிரடிப்படையின் (STF) வியத்தகு என்கவுண்டரில் தனது முடிவைச் சந்தித்தார். வரலாறாக மாறிய அவரது வாழ்க்கைகதை  காவல்துறை ஆவணங்களின் ஒரு பகுதியாக உள்ளது.  வரவிருக்கும் ZEE5 தமிழ் ஒரிஜினல் சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ என்பது வீரப்பனால் அவரது வார்த்தைகளில் விவரிக்கப்படும்  ஒரு தனித்துவமான ஆவணம் ஆகும். இந்த சீரிஸ் அவர் வாழ்வின் மீது ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது.


Trailer Link: https://youtu.be/Ho0JTx-mV8M



ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், 

"இந்தியாவின் நன்கு அறியப்பட்ட வனக் கொள்ளைக்காரன் குறித்து, அதிகம் அறியப்படாத அவரின் வாழ்க்கைப் பக்கங்களை  வழங்கும் 'கூச முனிசாமி வீரப்பன்' சீரிஸை,  பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சிக்கல்கள் மிகுந்த அவரின் வாழ்க்கை பற்றிய பல அறியப்படாத பக்கங்களை இந்த  சீரிஸ் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வீரப்பனின் வாழ்க்கை மற்றும் உள்ளூரில்  அவர் ஏற்படுத்திய ஆழமான தாக்கம், அவரது வெற்றிக் கதைகள் எனப் பல இட்டுக்கட்டப்பட்ட கதைகள் உலாவும் இந்தச் சமூகத்தில் இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸ், ஒரு புதிய தெளிவான பார்வையை வழங்குமென நாங்கள் நம்புகிறோம். இந்தத் தொடர் பார்வையாளர்களை மனித வாழ்வின் வெவ்வேறு முகங்களைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டும், இந்தியாவின்  கடந்த காலத்தின் குற்றவியல் உலகின் ஆழத்தை ஆராயும் கதையாகப் பார்வையாளர்களை இந்த சீரிஸ் கவர்ந்திழுக்கும்."



பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கூறுகையில், “வீரப்பனுடனான  நேர்காணலைப் பெறுவதற்கு,  நாங்கள் பெரும் முயற்சிகளையும், பல இன்னல்களையும் இடர்களையும் சந்தித்தோம். முதல் முறையாக, இந்த நேர்காணலின் மிக விரிவான பதிப்பு ZEE5 OTT தளத்தில் பார்வையாளர்களுக்கு "கூச முனிசாமி வீரப்பன்" என்ற தலைப்பில் ஆவணக் கதையாக வழங்கப்படவுள்ளது. வீரப்பனின் கதை நேர்மையுடனும் முழுமையுடனும், பாதிக்கப்பட்டவர்களின் கதைகளை உள்ளடக்கியதாகச் சித்தரிக்கப்பட வேண்டியது அவசியம். இந்த சீரிஸ் வெறும் ஆவணப்படம் அல்ல; இது ஒரு ஈர்க்கக்கூடிய ஆக்‌ஷன் த்ரில்லராக மாறுவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டதாகும்.


தயாரிப்பாளர் பிரபாவதி கூறுகையில், “உலகத் தரத்தில் உள்ளூர் கதைகளைத் தயாரித்துக் காட்சிப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாங்கள் 'தீரன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தை நிறுவியுள்ளோம். எங்களின் முதல் தயாரிப்பான 'கூச முனிசாமி வீரப்பன்' ஒரு உயர்தரமான ஆவணத் தொடராக, இந்தியாவில் 'டாக்கு-சீரிஸ்' வகைக்கான எடுத்துக்காட்டாக இருப்பதோடு ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் புதுமையான அனுபவத்தைத் தருமென நாங்கள் நம்புகிறோம்.




‘கூச முனிசாமி வீரப்பன்’ டிசம்பர் 8 ஆம் தேதி ZEE5 இல் பிரத்தியேகமாகத் திரையிடப்படுகிறது!



ZEE5  பற்றி

ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள்  கொண்ட ஒரு பெரும் திரை  நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது.  பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு  12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5  வழங்குகிறது.




Popular posts from this blog

Movie Review : Mathimaran

Movie Review: Maal

Music Director Vidyasagar’s son Harsha Vardhan U makes musical debut in Sibi film!