Posts

Showing posts from January 19, 2026

திங்க் ஸ்டுடியோஸ் (ThinkStudios) தயாரிப்பில் உருவாகும் கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்

Image
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில், கவின் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார். இப்படத்தில் சாண்டி மாஸ்டர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், படக்குழு ஒரு அட்டகாசமான போஸ்டர் மற்றும் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து உருவான கவின் – சாண்டி மாஸ்டர் கூட்டணிக்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே அபாரமான வரவேற்பு இருந்து வருகிறது. அவர்களுடைய இயல்பான நட்பு, கலகலப்பான உரையாடல்கள், ஜாலியான கெமிஸ்ட்ரி ஆகியவை ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தி வந்தது. அந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ஒரே படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியையும் பெரும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. கவினும் சாண்டி மாஸ்டரும் மாடர்ன் கெட்டப்பில், வாயில் வெடியை வைத்தபடி “Boys Are Back” என அறிவிக்கும் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, அறிவிப்பு வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. கலகலப்பான ஒரு ஆபிஸ் சூழலில் அனைத்தும் கலைந்து கிடக்கும் நிலைய...