இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !


மாருதி பிலிம்ஸ் R இராதாகிருஷ்ணன் மற்றும்  S.ஹரி சார்பில் ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ P.ஞானசேகர் தயாரிக்கும் தமிழ் திரைப்படம் “டெவில்”. 

இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில்,  இயக்குநர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்படப்பிடிப்பு  முழுமையாக  நிறைவடைந்தது. 

மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுமாகும், இப்படம் அறிவிக்கப்பட்ட போதே, ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியது. ரசிகர்களை இருக்கை நுணியில் கட்டிப்போடும் புதுமையான திரில்லராக ‘டெவில்’ திரைப்படம் உருவாகியுள்ளது. 

இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

படத்தின் தொழில் நுட்ப குழுவினர் விபரம் 

தயாரிப்பாளர் : R. ராதா கிருஷ்ணன் 
தயாரிப்பு நிறுவனம் : டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்
எழுத்து, இயக்கம் : ஆதித்யா 
ஒளிப்பதிவு : கார்த்திக் முத்துக்குமார்
இசை: மிஷ்கின் 
எடிட்டர்: இளையராஜா 
கலை இயக்கம் : மரியா கெர்ளி
ஸ்டில்ஸ்: அபிஷேக் ராஜ்
வடிவமைப்பாளர்: கண்ணதாசன் 
ஆடை வடிவமைப்பாளர்: ஷைமா அஸ்லம்  
தயாரிப்பு நிர்வாகி: S.வெங்கடேஷ்
லைன் புரடியூசர் : ஶ்ரீகாந்த்
மக்கள் தொடர்பு - சதீஷ் குமார் (AIM)

Popular posts from this blog

Movie Review : Sirai

Webseries Review : Heartiley Battery

Shakthi Thirumagan– A Landmark Film in Vijay Antony’s Career