Rajini film wraps up shoot !

 " ரஜினி " படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது

விரைவில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.


வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது "ரஜினி " 

A.வெங்கடேஷ் இயக்குகிறார்.


விஜய் சத்யா  கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன்  விஜய் சத்யா சிக்ஸ் பேக்  உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக செரின் நடிக்கிறார். மற்றும்  வனிதா, மூக்குத்தி முருகன், குக் வித் கோமாளி பாலா, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர்.





இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்து வருகிறார். பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார்.

இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடவிருக்கிறார்.


ரஜினி படத்தை ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துள்ளார்கள்.


படம் பற்றி இயக்குனர் A.வெங்கடேஷ் கூறியதாவது...


படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது தற்போது டப்பிங் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு மாதமாக பிரீ புரொடக்சன் பணியை சிறப்பாக செய்ததால் இத்தனை நடிகர்களை வைத்து ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்தேன்.

திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமா  படமாக இதை உருவாக்கி  உள்ளேன். ரஜினி ரசிகரான விஜய் சத்யா ( ரஜினி ) தனது வாழ்வில் எதிர்பாராத விஷயமாக ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார். அது என்ன மாதிரியான சிக்கல்கள் அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.

அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில்  நாய் ஒன்று நடித்துள்ளது. நான் இயக்கிய படங்களிலேயே இந்த படத்தில் தான் ஒரு மிருகத்தை நடிக்க வைத்திருக்கிறேன். அந்த நாய் வரும் காட்சிகள் அனைத்தும் அவ்வளவு சிறப்பாக இருக்கும், அப்படி ஒரு ஆர்ட்டிஸ்டை போல நடித்துள்ளது. படப்பிடிப்பு முடியும்போது நானும் அந்த நாயும் நாண்பர்களாகி விட்டோம். விஜய் சத்யா இந்த படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. அப்படி சிறப்பான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் என்றார் இயக்குனர் A.வெங்கடேஷ்




விரைவில் பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்த தயாரிப்பாளர் V.பழனிவேல்  திட்டமிட்டுள்ளார்.

Popular posts from this blog

Brindha Shivakumar dubs for Alia Bhatt in Brahmastra Tamil version!

Web Series Review - Ayali

Karthi blessed with baby boy !