ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய திரைப்படம் !

 


அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய படத்திற்கான ஆடிசனில் குவிந்த நடிகர், நடிகையர்கள் !


இந்திய சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் மிக முக்கியமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். தனது தனித்த திரைமொழியுடன், தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு முறையும் அசத்துபவர்.  அவரது நேரம், பிரேமம் படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்த நிலையில், தற்போது ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்தப்படம் தமிழ் மலையாளம் என இருமொழிகளில் உருவாகிறது. நெஞ்சுக்கு நீதி, வீட்ல விஷேசம், முதலான படங்களை தயாரித்துள்ளது ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம். தற்போது இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் புதிய படத்தை தயாரிக்கவுள்ளது. 


ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் புதிய படத்தை இயக்குகிறார் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 
இந்நிலையில் சமீபத்தில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், ரோமியோ பிக்சர்ஸுடன் இணையும் தனது புதிய படத்திற்காக நடிகர்கள் தேவைப்படுவதாகவும், அதற்கான ஆடிசன் 7 நாட்கள் நடக்க இருப்பதாகவும், அந்த ஆடிசனில் 15 வயதிலிருந்து 55 வயது வரையிலான நடிப்பார்வம் கொண்டவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம் என, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.


இந்த செய்தியினை அடுத்து, ஆடிசனுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர்  அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர். அவர்களுக்கான ஆடிசனுடன் படத்தின் முந்தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் ஆரம்பிக்கும் முன்னதாகவே படத்திற்கு நிலவி வரும் இத்தகைய எதிர்பார்ப்பு, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


தற்போது ரோமியோ பிக்சர்ஸ், இயக்குநர் ராஜுமோகன் இயக்கத்தில் “பாபா பிளாக்‌ ஷீப்” படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Popular posts from this blog

Movie Review : Mathimaran

Movie Review: Maal

Music Director Vidyasagar’s son Harsha Vardhan U makes musical debut in Sibi film!