ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் 'ரெபல்' மார்ச் 22ஆம் தேதி வெளியீடு

 *ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ரெபல்' மார்ச் 22ஆம் தேதி வெளியாகிறது


இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெபல்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள்.






அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும்  திரைப்படம் 'ரெபல்'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், 'கல்லூரி' வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். 


இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் தேதியன்று உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக காணொளியில் இடம் பெறும் வசனங்களும், அதிரடி காட்சிகளும், ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ஆக்சன் அவதாரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.


https://x.com/StudioGreen2/status/1750383039631564828?s=20

Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Movie Review : Mathimaran

Film Review: 7G The Dark Story