Posts

Showing posts from February 6, 2026

தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் வெற்றி விழா

Image
  கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் வெளியான 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  பொங்கல் திருநாளன்று வெளியான 'தலைவர் தம்பி தலைமையில்' எனும் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று பெரும் வெற்றியை வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெற்றது.  இதனைத் தொடர்ந்து இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் 'தலைவர் தம்பி தலைமையில்' பட குழுவினருடன் மத்திய இணை அமைச்சர் திரு சுரேஷ் கோபி, தமிழ் திரையுலகத்தை சேர்ந்த முன்னணி நட்சத்திர நடிகர்களும், இயக்குநர்களும், திரையுலக பிரபலங்களும் என ஏராளமானவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  *இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசுகையில்,* ''எனக்கு ஏழு வயதாக இருக்கும்போதே தந்தையை இழந்தேன். பிறக்கும் போதே பணக்காரராக பிறந்து.. பிறகு ஏழையாகி.. பிறகு மீண்டும் மீண்டும் ஏழையாகி, அதன் பிறகு பணக்காரனாகி இருக்கிறேன். இந்த வ...