டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஐந்தாவது மலையாள ஒரிஜினல் சீரிஸ் "1000 பேபிஸ்" டிரெய்லர் வெளியாகியுள்ளது !

மலையாள ஒரிஜினல் படைப்புகளைச் சிறப்பிக்கும் வகையில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் ஐந்தாவது ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்  சீரிஸ் "1000 பேபிஸ்" சீரிஸை வழங்குகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த சீரிஸின் புதிய டிரெய்லர், தனித்துவமான கதை சொல்லல் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம் என, ஆவலைத்தூண்டும்  பரபரப்பான உலகை  நமக்குக் காட்டுகிறது. இந்த சீரிஸ் அக்டோபர் 18 முதல் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

இந்த பரபரப்பான சீரிஸில், புகழ்பெற்ற நடிகர்களான நீனா குப்தா மற்றும் ரகுமான் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.  சஞ்சு சிவராம், அஷ்வின் குமார், அடில் இப்ராஹிம், ஷாஜு ஸ்ரீதர், இர்ஷாத் அலி, ஜாய் மேத்யூ, வி.கே.பி, மனு எம் லால், ஷாலு ரஹீம், சிராஜுதீன்,  நாசர், டெயின் டேவிஸ், ராதிகா ராதாகிருஷ்ணன், விவியா சாந்த், நஸ்லின், திலீப் மேனன், தனேஷ் ஆனந்த், ஸ்ரீகாந்த் முரளி, ஸ்ரீகாந்த் பாலச்சந்திரன், மற்றும் ராதா கோமதி ஆகியோர் முக்கிய வேடங்களில் இணைந்து  நடித்துள்ளனர்.




இந்த சீரிஸை இயக்குநர்  நஜீம் கோயா இயக்கியுள்ளார், நஜீம் கோயா , அரூஸ் இர்பான் இணைந்து வசனம் எழுதியுள்ளார்கள்.  ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் சார்பில், ஷாஜி நடேசன் மற்றும் ஆர்யா ஆகியோர் இந்த சீரிஸைத்  தயாரித்துள்ளனர். ஃபைஸ் சித்திக்கின் அற்புதமான ஒளிப்பதிவு மற்றும் சங்கர் ஷர்மாவின் வசீகரிக்கும் இசையுடன்,தனுஷ் நாயனாரின் சிறந்த ஒலி வடிவமைப்பு மற்றும் ஃபசல் A பேக்கரின் ஒலி கலவையில், "1000 பேபிஸ்" சஸ்பென்ஸ், மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன், புதுமையான அனுபவம் தரும் சீரிஸாக உருவாகியுள்ளது. 


கலை இயக்கம்  ஆஷிக் எஸ், ஒப்பனை அமல் சந்திரன், உடைகள் அருண் மனோகர், ஸ்டில் போட்டோகிராஃபி  சந்தோஷ் பட்டாம்பி,  இணை இயக்கம் ஜோமன் ஜோஷி திட்டயில் மற்றும் நியாஸ் நிசார், தலைமை இணை இயக்கம் சுனில் காரியட்டுகர ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பங்கேற்றுள்ளனர். 


 "1000 பேபிஸ்" சீரிஸ் அக்டோபர் 18 முதல்  மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் ஸ்ட்ரீமாகிறது, இதன் மூலம் இந்தியா முழுவதும் பரந்த பார்வையாளர்கள் தங்கள் மொழியில் இந்த சீரிஸை பார்த்து ரசிக்கலாம். 


நீங்கள் இதுவரை டிரெய்லரைப் பார்க்கவில்லை எனில்,  இங்கே பார்க்கவும் - https://youtu.be/2j7b-VtwsQg?si=qAnF0e-iSeckEPde



டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது.  மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Film Review: 7G The Dark Story

Movie Review: Boomer Uncle