Thuneri Horror flick releases tomorrow!


பேய் படங்கள் என்றாலே பாலியல் காட்சிகளும்,கோரமான காட்சிகளும் மிகுந்து இருக்கும்.

‘நூநேரி’ குடும்பத்தோடு கண்டு களிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பேய் படம்.

தூநேரி திரைக்கதை நான்கு சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரங்களாக இடம் பெறும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.


சிறுவர்களோடு பேய்கள் நடத்தும் அமானுஷ்ய விளையாட்டுகள் பார்வையாளர்கள் அனைவரையும் வசியப்படுத்தும்.‘தூநேரி’ நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் அழகிய மலை கிராமம்.

பகலில் பசுமையும் வளமையும் நிறைந்த காட்சிகளை காட்டி பரவசப்படுத்தும் தூநேரி, இரவிலே கொடூரமான துர்மரணங்களை நிகழ்த்தி அச்சுறுத்துகிறது.

‘தொடர் மரணங்கள் அனைத்தையும் நிகழ்த்துவது  ஒரு பேய்’ என ஒட்டு மொத்த மக்களும் நம்பி நடுங்குகிறார்கள்.

ஒற்றைப்பேயின் ஆட்டத்துக்கு முடிவு கட்டப்படுகிறதா?

என்பதை விளக்கும் இறுதிக்காட்சி பார்வையாளர்களை விறுவிறுப்பின் உச்சத்துக்கு அழைத்துச்செல்லும்.தூநேரி திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதி  ‘ஷேடோ லைட் எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கியுள்ளார் புதுமுக இயக்குநர் சுனில் டிக்சன்.

சுனில் டிக்சன் அனிமேசன் கலையில் வித்தகர். சென்னை சில்க்ஸ், அருண் Ice, போன்ற விளம்பரங்களும் இயக்கியுள்ளார்.


உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர் குண்டின் டொரண்டினோ, கமல்ஹாசன் நடித்த ‘ஆளவந்தான்’ திரைப்படத்தில் இடம் பெற்ற அனிமேசன் காட்சிகளை படைப்பூக்கமாக கொண்டு தனது ‘கில் பில்’ திரைப்படத்தின்  காட்சிகளை வடிவமைத்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

ஆளவந்தான் அனிமேசன் காட்சிகளை வடிவமைத்ததில் சுனில் டிக்சன் முக்கிய பங்கு வகித்தார்.

அதே போன்று இயக்குநர் வெற்றி மாறன் உருவாக்கிய “ஆடுகளம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற சேவல் சண்டை காட்சிகளை அனிமேசனில் செதுக்கியவர் இவரே!.

தனது படத்தை 30 நிமிடங்களுக்கு மேல் அனிமேசன் காட்சிகளால் வளப்படுத்தியுள்ளார். 


சதுரங்க வேட்டை, பாரிஜாதம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘நிவின் கார்த்திக்’ இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு மிக்க காவல்துறை அதிகாரியாக நூநேரி திரைப்படத்தில் வாழ்ந்திருக்கிறார்.


‘சார்பட்டா பரம்பரையில்’ ‘டாடி’ என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டிய ‘ஜான் விஜய்’ தூநேரி படத்தின் கதையின் நாயகனாக முக்கிய பங்காற்றியுள்ளார்.

தூநேரி படத்தின் திரைக்கதை கருப்பசாமி என்ற கதாபாத்திரத்தில் தொடங்கி முடிவுறுகிறது.

அத்தகைய வலு மிகுந்த பாத்திரத்தை தனது தோளில் சுமந்து வளப்படுத்தியுள்ளார் ஜான் விஜய்.

கதிகலங்க வைக்கும் கருப்பசாமியாகவும்,கண் கலங்க வைக்கும் கருப்பசாமியாகவும் கூடு விட்டு கூடு பாய்ந்து அதிசயம் நிகழ்த்தியுள்ளார்.


பல மலையாளப்படங்களில் நடித்து புகழ் பெற்ற மியாஶ்ரீ தூநேரி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

படத்தில் இவர் போட்ட பேயாட்டங்கள் பார்வையாளர்களை ஆட்டம் காணச்செய்யும்.


மலைப்பிரதேசங்கள் அமானுஷ்யத்தை வரவழைப்பைதில் வல்லமை வாய்ந்தவை.

தூநேரி திரைப்படத்தில் ஊட்டி,கொடைக்கானல்,ஏற்காடு, வாகமன்,  என நான்கு மலைப்பிரதேசங்கள் போட்டி போட்டு அமானுஷ்யத்தை வாரி வழங்குகின்றன.


நட்சத்திரங்கள்: ஜான் விஜய்,நவீன் கார்த்திக்,மியாஶ்ரீ.

 சிறுவர் நட்சத்திரங்கள்: அஸ்மிதா, நகுல், அபிஜித்,சாத்விகா.

ஒளிப்பதிவு: கலேஷ் மற்றும் ஆலன்

ஒலி வடிவமைப்பு:

தொகுப்பு: ஃபிடல் காஷ்ரோ

கலை இயக்கம்: ரூபேஷ்

இசை: கலையரசன்

சண்டைக்காட்சி: டிரகன் ஜீரோஷ்,பயர் கார்த்தி

மக்கள் தொடர்பு: ஜான்.

 தூநேரி திரைப்படம் டிசம்பர் 24 முதல் உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகிறது.

வெளியீடு: ‘ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்’ ஜெனிஸ்.Popular posts from this blog

Movie Review : Mathimaran

Movie Review: Maal

Music Director Vidyasagar’s son Harsha Vardhan U makes musical debut in Sibi film!