கே.ஜி.எஃப், காந்தாரா வெற்றி படங்களின் வரிசையில் ஹோம்பாலே பிலிம்ஸின் அடுத்த வெற்றி படைப்பு படப்பிடிப்பில்: ரகு தாத்தா

 


‘புரட்சி தொடங்கும் இடம் வீடு’. இக்கருத்தை மையமாக கொண்டதிரைப்படத்தின் முதல் பார்வையே பலரின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றது. கே.ஜி.எஃப்-1,2, காந்தாரா வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் முதல் தமிழ் படத்தின் முதல் பார்வை வெளியீடு, 'ரகு தாத்தா'- ஓர் இளம் பெண் தன்னைச் சார்ந்தவர்களையும், தன் நிலத்தையும், அடையாளத்தையும் காக்கும் போராட்டத்தில் தன்னையே அறிந்துக்கொள்ளும் சவாலான பயணத்தை, நகைச்சுவை கலந்து, கூறும் பொழுது போக்கு சித்திரம். இத்திரைப்படத்தில் 'நடிகையர் திலகமாக' வாழ்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, வெற்றியையும் விருதுகளையும் வாரி குவித்த 'பேமிலி மேன்' வலை தொடரின் எழுத்தாளர் சுமன் குமார் இயக்குனராக அறிமுகமாகிறார். கோடை 2023-ல் திரையரங்குகளை சிரிப்பொலியாக்க, இம்மாதத்திலிருந்து விறுவிறுப்பான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஹோம்பாலே பிலிம்ஸின் முதல் தமிழ் படத்தில் தேசிய விருது பெற்ற, தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகங்களில் புகழின் உச்சத்தில் திகழும் நாயகியான கீர்த்தி சுரேஷுடன் இணைவதில் பெருமிதம் கொள்கிறோம்.


ஹோம்பாலே பிலிம்ஸ் இவ்வாண்டில் கே.ஜி.எஃப்-2, காந்தாரா வெற்றி படங்களை கொடுத்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக தனது அடுத்த படைப்பான ரகு தாத்தாவை அறிவித்துள்ளனர். இப்படமானது, நாயகியை மையமாக கொண்ட கதை களம் மட்டுமின்றி பலரின் உள்ளங்களை கொள்ளைக் கொள்ளும் நகைச்சுவை அம்சமும் கொண்டது. இத்திரைப்படத்தில் அமைதியுடன் கூர் மதி கொண்டு, கொள்கையில் உறுதியுடன், தேவையெனில் புயலாக மாறும் நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷின் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் பார்வை வெளியீட்டில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறியதாவது - 'ரகு தாத்தா நகைச்சுவை பட மட்டுமின்றி, தைரியமிக்க, துணிச்சலான பெண் தன் கொள்கைகளுக்காக நடத்தும் போராட்டத்தில் தன் தனித்துவத்தை கண்டுக்கொள்ளும் களமானது, மற்றவர்களுக்கும் ஓர் உத்வேகமாக திகழும். நாயகி எதிர்கொள்ளும் சவால்கள் அவரின் அடையாளத்தை எவ்வாறு வெளிக்கொணர்கிறது என்பதை நகைச்சுவை கலந்து, குடும்பத்திலுள்ள  அனைவரையும் ரசித்து சிரிக்க வைக்கும் படி இருக்கும். இக்கதாபாத்திரத்திற்கு உயிர் தர கீர்த்தியை போன்ற திறமைமிக்க ஓர் நடிகையால் தான் முடியும். அவருடன் இணைந்து பணிபுரிவதில் மட்டற்ற மகிழ்ச்சி'.


ஹோம்பாலே பிலிம்ஸ் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், இந்திய திரை ரசிகர்களுக்கு புது புது அனுபவங்களை கொடுக்கவும் ஒருபோதும் தயங்கியதில்லை. காந்தாராவின் வெற்றியானது நிரூபித்தது கே.ஜி.எஃப்-2 வைப்போல் நல்ல கதையம்சம் கொண்டு நேர்த்தியாக எடுக்கப் படும் திரைப்படம் மாபெரும் வெற்றியை குவிக்கும். ஹோம்பாலே பிலிம்ஸ் வருமாண்டில் மேலும் 4 பிரமாண்ட படைப்புகளை வெளியிட தயாராக உள்ளது. பிரபாஸுடன் ‘சலார்’, செப்டம்பர் 2023, பாஹத் பாஸிலுடன் ‘தூமம்’, ஸ்ரீமுரளியுடன் ‘பகிரா’ 2023 இறுதிக்குள். இதை தவிர்த்து, மேலும் ஒரு பான் இந்திய திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவிருக்கிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் வரவிருக்கும் இரு ஆண்டுகளில் 14 திரைப்படங்களை வெளியிட உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் கனவிலும் நினைக்க முடியாத திட்டமிது.


ஹோம்பாலே பிலிம்ஸின் வெற்றி ரகசியமான திறமை மிக்க குழுவும், தகுதியான நடிகர்களும் ரகு தாத்தாவிற்கும் கிடைத்துள்ளனர். திரு. M. S. பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவில், ராம்சரண்தேஜ் லாபானி கலை இயக்கத்தில், 'ஜெய் பீம்' புகழ் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில், தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி வடிவமைப்பில், T. S. சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகிறது ரகு தாத்தா. 

Popular posts from this blog

Brindha Shivakumar dubs for Alia Bhatt in Brahmastra Tamil version!

Web Series Review - Ayali

Karthi blessed with baby boy !