K Veera Babu acts in, directs Mudakkaruthaan

 நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி பாரதி இணையும் புதிய படம் முடக்கறுத்தான் . தற்போது  K .வீரபாபு 'முடக்கறுத்தான் ' எனும் புதிய படத்தை இயக்கி நடிக்கிறார் 


இப்படத்தை வயல் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய , சிற்பி இசையமைக்கிறார். மேலும் இப்படத்திற்கு பழனி பாரதி பாடல்களை எழுதுகிறார் .நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி பாரதி இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது .படத்தொகுப்பினை ஆகாஷும் ,சண்டை பயிற்சியை சூப்பர் சுபராயனும்  மேற்கொள்கிறார்கள் . கதை நாயகியாக மஹானா நடிக்கிறார் .



இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது . படக்குழுவினர் மற்றும் சிறப்பு அழைப்பாளராக சுரேஷ் காமாட்சி மற்றும் பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் .


நடிகை  மஹானா கூறியவை,

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிக்கை நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த திரைப்படத்தில் நான் ஒரு குறும்புக்கார கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளேன். இப்படத்தில் 4 பாடல்கள் உள்ளது. வீரபாபு சிங்கிள் டேக்கில் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார் குழந்தைகளுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும்.


நடிகர் & இயக்குனர் வீரபாபு பேசியவை,

சிறு வயதிலிருந்தே சினிமா மீது எனக்கு ஆர்வம் அதிகம். இந்தத் துறையிலும் சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன் .தற்போது அது நிஜமாகி உள்ளது .குழந்தைகளின் வாழ்க்கையை முடக்கும் கயவர்கள்  பற்றிய கதைதான் முடக்கறுத்தான். நிறைய குழந்தைகள் பல்வேறு சூழ்நிலை காரணமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கான முழுக்க முழுக்க ஒரு அமைப்பு, திட்டம்  உருவாக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. குழந்தைகளுக்கான பல பாதுகாப்பு அமைப்புகள் உள்ளது .அது இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். இந்த படத்தை ஒரு பார்வையாளனாக பார்த்து சொல்கிறேன் இந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடையும்.



தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியவை,

இந்த கொரோனா காலத்தில் எங்கு திரும்பினாலும் உயிரிழப்பு பற்றிய செய்திகள் வந்த சமயத்தில் உயிர்களை காப்பற்றிய மருத்துவர்  என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தேன் . ஒருநாள் வீரபாபு சந்திப்பின்போது கதையை பற்றி அவர் சொன்னார். இந்த காலகட்டத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு முக்கியமான கதை .அருமையாக வந்துள்ளது. குறிப்பாக சித்ரா பாடிய பாடல் ஒன்று சிறப்பாக வந்துள்ளது. பொதுவாக நடிப்பது சுலபம், பாடல் காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் நடிப்பது சிரமம். ஆனால் அதையும் சிறப்பாக வீரபாபு செய்துள்ளார் .கண்டிப்பாக அவர் ஜெயிப்பார்.


தயாரிப்பாளர் அழகன் தமிழ் மணி பேசியவை, நானும் வீரபாபுவும் 20 வருட நண்பர்கள். இந்த கொரோனா காலகட்டத்தில் பல மக்களின் உயிரை காப்பாற்றிய வீரபாபு இந்த படத்தை நீங்கள் தான் தயாரிக்க வேண்டும் என என்னிடம் கூறினார். அதனால் எனது வயல் மூவிஸ் நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்து இருக்கிறேன். இப்படத்தில் என்னையும் நடிக்க வைத்துள்ளார். தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் .

இசையமைப்பாளர் சிற்பி பேசியவை, விநாயகர் சதுர்த்தி அன்று  இந்த  படத்தின் டீசர் வெளியாவது இறைவனின் ஆசீர்வாதம் என்று தான் சொல்ல வேண்டும்.12 ஆண்டுகள் கழித்து இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளேன் இந்த வாய்ப்பினை தந்த இயக்குனர் வீரபாபு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீரபாபு அவர்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் என் நட்பு வட்டாரத்தில் இருக்கும் மனித நேயம் உள்ளவர். வீரபாபு சிறந்த கதையை தேர்ந்தெடுத்து இயக்கியுள்ளார். படத்தின் பாடல் மிகவும் அருமையாக வந்துள்ளது கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.




Popular posts from this blog

Karthi blessed with baby boy !

Web Series Review - Ayali

Brindha Shivakumar dubs for Alia Bhatt in Brahmastra Tamil version!