Grand trailer launch of Sila Nerangalil Sila Manithargal !
சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்பட இசை வெளியீட்டு விழா !
தினசரி வாழ்வில் இயல்பான 4 இளைஞர்கள் சந்திக்கும் அனுபவங்கள், சம்பவங்கள், அவர்களின் வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பதை, சொல்லும் அழகிய திரை அனுபவமாக உருவாகியுள்ளது “சில நேரங்களில் சில மனிதர்கள்” திரைப்படம். AR Entertainment சார்பில் அக்பர், அஜ்மல் கான் & ரேயா தயாரிப்பில், இயக்குநர் விஷால் வெங்கட் எழுதி இயக்கியுள்ளார். Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்திரன் இப்படத்தை வழங்குகிறார்.
அசோக் செல்வன், அபி ஹாசன், மணிகண்டன், பிரவீன், நடிகை பானுப்பிரியா, ரித்விகா, அஞ்சு குரியன், ஆகியோருடன், நாசர், KS.ரவிக்குமார் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு திருவிழா நடிகர் கமலஹாசன் முன்னிலையில் திரைபிரபலங்கள் இயக்குநர் வெற்றிமாறன், ராஜேஷ் M செல்வா, KS.ரவிக்குமார், கஸ்தூரி ராஜா, பிரபு சாலமன் உட்பட பல திரைநட்சத்திரங்களுடன், படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது.
இவ்விழாவில்..
*தயாரிப்பாளர் ரேயா பேசியதாவது…*
இப்படத்தின் கதையை முதலில் கேட்டபோதே, கதாப்பாத்திரங்களோடு கலந்துவிட்டோம் இந்தப்படம் அதுவாகவே எங்களை இங்கு கொண்டு வந்துள்ளது. இன்று எங்களை மதித்து இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. எங்கள் இயக்குநருக்கு இது முதல் படம் போலவே இருக்காது, அதை திரையில் நீங்கள் பார்ப்பீர்கள். ரதன் சார் அருமையான இசையை தந்திருக்கிறார். திரு ரவீந்திரன் சார் எங்களுடன் இணைந்து இந்தப்படத்தை உருவாக்கி தந்ததற்கு நன்றி. உங்கள் ஆதரவு எங்கள் படத்திற்கு தேவை, ஆதரவு தாருங்கள் நன்றி.
*Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசியதாவது…*
தொடர்ந்து எங்கள் படத்திற்கு ஆதரவை தந்து வரும் பத்திரிக்கையாளர்கள், இந்தப்படத்திற்கும் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. இன்று எங்கள் படத்திற்கு கமல் சார் தனது கடும் பணிச்சூழலுக்கு இடையில் வந்து வாழ்த்தியதற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
*நடிகர் கமலஹாசன் பேசியதாவது…*
தயாரிப்பாளர் அக்பர் என்று பேசிக்கொண்டார்கள், ஆனால் போஸ்டரில் அவர் பெயர் இல்லை. இங்கு பெயர் போட்டுக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களின் தயாரிப்பாளர் அவர் தான். அவருக்காக இங்கு வந்தவர்களில் ஒருவன் தான் நானும். சினிமா நெருப்பு உங்களுக்குள் பற்றிக்கொண்டால், அது உங்களை அழைத்து வந்து விடும். டீ கடையில் இருந்து இங்கு வர முடியுமென்றால் இதை தாண்டியும் அடுத்த படிக்கும் உங்களால் செல்ல முடியும். உங்கள் ஊக்கமும், ஆர்வமும் தான் உங்களை இங்கு வரவைத்துள்ளது. பாலுமகேந்திரா அறிவுரை சொன்னதாக சிலர் சொன்னார்கள், அவர் இருக்கும்போதே நண்பனாக பழகி, கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எங்களை பார்த்து வியந்து விடாதீர்கள். நாங்கள் செய்த தவறு உங்களுக்கு தெரிந்தால், அதை செய்யாதீர்கள். இப்படத்தில் சில காட்சிகளை பார்த்தேன் அதில் எதார்த்தம் இருந்தது. எங்களுக்கு கதை சொல்வதில் உள்ள இடைஞ்சலே பாடல்கள் தான் அதை சொன்னால் சிலர் கோபித்து கொள்ளலாம். ஆனால் கதை கெடாமல் படத்தில் பாடல்களை பயன்படுத்த எங்கள் ஆசான்கள் சொல்லி தந்தார்கள். ஆனால் இன்று டெக்னாலஜி வளர்ந்த பிறகும், பாட்டை ஏன் வைத்துகொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. உண்மையை சொன்னால் தமிழில் யாருமே இதுவரைக்கும் ஒரு மியூசிக்கில் எடுக்கவில்லை என்பது தான் உண்மை. அது நடைபெற வேண்டும். கொரோனா போய்விடும் தான் ஆனால் அஜாக்கிரதையாக இருக்காதீர்கள். அதற்கு உதாரணமாக நானே இருக்கிறேன். என்னை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள். இயக்குநர் நல்ல திறமைசாலி. இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். உங்களை இசையமைப்பாளராக சொன்ன நண்பர் ஏ ஆர் ரஹ்மானுக்கும் நன்றி. இந்தபடத்தில் உழைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
*இயக்குநர் KS. ரவிக்குமார், பேசியதாவது…*
இங்கு நான் வர மூணு காரணம், நான் இப்படத்தில் ஒரு பாத்திரம் செய்திருக்கிறேன். தயாரிப்பாளர் ரவீந்திரன் எனது அடுத்த படத்தின் தயாரிப்பாளர், அப்புறம் கண்டிப்பா என்னை கமல் சார் அருகில் தான் அமர வைப்பார்கள் என்று தான் வந்தேன். அவரை சந்தித்தது மகிழ்ச்சி. சின்ன வயதில் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் பார்த்திருக்கிறேன். அருமையான படம், அந்த படத்தின் டைட்டில் என்பதால், அதே கதையா எனக் கேட்டேன். இல்லை என்று சொன்னார்கள். சரி என்றேன். விஷால் மிக நுணுக்கமாக பணியாற்றக்கூடியவர். படப்பிடிப்பில் தயாரிப்பாளரை மனதில் வைத்து படமாக்கும் திறமை அவரிடம் இருந்தது, என்னை பார்த்தது போல் இருந்தது. ரதன் பாடல்கள் நன்றாக இருக்கிறது அவருக்கு வாழ்த்துகள் படம் மாபெரும் வெற்றி வாழ்த்துகிறேன் நன்றி.
*இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது…*
இயக்குநர் விஷாலுக்கும் இசையமைப்பாளர் ரதனும் படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் நன்றி.
*இயக்குநர் பிரபு சாலமன் பேசியதாவது…*
நான் என்றும் வியந்து பார்க்கும் சலிக்காத பிரமாண்டம் கமல் சாருக்கு வணக்கம், இந்த விழாவின் நாயகன் ரதனுக்கு வாழ்த்துகள் இசையில் சத்தம் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கிறது. டிரெய்லர் படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள் படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
*இயக்குநர் ராஜேஷ் M செல்வா பேசியதாவது…*
கமல் சாரிடம் சினிமாவை கற்றுக்கொண்டதை விட ஒழுக்கத்தை கற்றுக்கொண்டோம். அதை அக்பரும் கடை பிடிக்கிறார். இந்தப்படத்தின் கதையை கேட்டு அக்பர் சொன்னபோதே அது நன்றாக இருந்தது, இப்போது படம் நன்றாக வந்திருப்பது மகிழ்ச்சி. எல்லோருக்கும் வாழ்த்துகள்.
*பாடலாசிரியர் RJ விஜய் பேசியதாவது…*
கமல் சார் படம் ஆந்திராவில் முதல் நாள் வெளியாகிறது என்றால் இங்கிருந்து கிளம்பி போய், பார்த்து வரும் பசங்க தான் நாங்க, நாங்கள்லாம் பேசி உருவான ஒரு படத்திற்கு, கமல் சார் வந்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் நான் ஒரு கதாப்பாத்திரம் நான் செய்ய வேண்டியது, ஆனால் அது சில காரணங்களால் நடக்கவில்லை. ஆனால் என் பெயர் படத்தில் இருக்க வேண்டும் எனக் கேட்டேன். இயக்குநர் பாடல் எழுத வைத்து இப்படத்தில் இடம்பெற வைத்துவிட்டார். அவருக்கு நன்றி இது நண்பர்களின் கனவு ஆதரவு தாருங்கள் நன்றி.
*இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசியதாவது..*
இசை இரைச்சல் இல்லாமல் துல்லியமான பாடல் கேட்பது இப்போது அபூர்வமாக இருக்கிறது, அது இந்தப்படத்தில் இருக்கிறது. ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் டைட்டில் வைத்ததற்கே இக்குழுவை பாராட்டலாம். எப்போதாவதுதான் இப்படிபட்ட படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் வருகிறார்கள். எங்கள் காலத்தில் படம் எடுப்பதும் தெரியாது முடிவதும் தெரியாது. ஆனால் இப்போது படம் ஆரம்பிப்பதில் பிரச்சனை, எடுப்பதில் பிரச்சனை, வெளியாவதில் பிரச்சனை. இது மாற வேண்டும். இந்தப்படம் பார்க்க மிக அற்புதமாக இருக்கிறது உழைத்த எல்லோருக்கும் வாழ்த்துகள். படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
*நடிகர் மணிகண்டன் பேசியதாவது…*
என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு இப்போது என் மனநிலை தெரியும். ஆழ்வார்பேட்டையை கடந்து போகும்போது, முகம் தெரியாதா என எட்டி பார்த்தவனுக்கு அதே கமல் சார் மேடையில் இருப்பது பாக்கியம். காலேஜில் நண்பர்கள் சினிமாவுக்கு போகனும்னு முடிவு செய்த போது, பேசியது அது பேச்சளவில் நிற்காமல் அதற்கு ஒரு கதை கிடைத்து இன்று படமாக நடந்திருக்கிறது. விஷால் நான் பொறாமைப்படும் கலைஞன், எந்நேரமும் உழைத்து கொண்டிருப்பான். ரதன் எனக்கு ஏழெட்டு வருடங்களாக தெரியும் நண்பர்களாக இணைந்து படம் செய்தது மகிழ்ச்சி. இந்தப்படம் ஒரு உண்மையான முயற்சியாக இருக்கும். நன்றி
*நடிகர் பிரவீன் பேசியதாவது…*
நான் இந்தபடத்தில ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். எங்கள் படத்திற்கு கமல் சார், வெற்றிமாறன் சார் உட்பட பிரபலங்கள் வந்து வாழ்த்துவது எங்களுக்கு கிடைத்த ஆசிர்வாதம், நான் மணிகண்டன் , மௌலி எல்லாம் கல்லூரி காலத்திலிருந்தே இணைந்து படம் செய்ய வேண்டும் என பேசியிருந்தோம் அது இப்போது நடந்திருப்பது மகிழ்ச்சி உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
*நடிகர் அபிஹாசன் பேசியதாவது…*
கமல் சார் முன்னால் நிற்பது, பிரின்ஸ்பல் முன்னாடி நின்னு பேசற மாதிரி இருக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு எனது நன்றிகள். இயக்குநர் விஷால் கல்லூரியில் எனது சீனியர், அவருடன் இணைந்து படம் செய்வது மகிழ்ச்சி. எனது முதல் பட தயாரிப்பாளர் கமல் சார், இயக்குநர் ராஜேஷ் அண்ணா இந்த மேடையில் இருப்பது மகிழ்ச்சி. எனது அம்மாவும் இந்த மேடையில் இருக்கிறார்கள். இது எனக்கு மிக முக்கியமான சிறப்பான தருணம் அனைவருக்கும் நன்றி.
*நடிகை ரித்விகா பேசியதாவது…*
இந்தப்படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி. இப்போது இந்த அரங்கம் நிறைந்திருப்பது போல் படத்திற்கும் அரங்கம் நிறைய வேண்டும் படத்தின் டைட்டில் வெளியிட்டது முதல் இப்போது வரை ஆதரவு தந்து வரும் கமல் சாருக்கு நன்றி, அனைவருக்கும் நன்றி.
*பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது…*
ஒரு நல்ல படம் நீண்ட நாளுக்கு பிறகு நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது, இதில் எனக்கும் வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துகள்.
*இசையமைப்பாளர் ரதன் பேசியதாவது…*
என்னை இசையமைப்பாளராக மாற சொன்ன ஏ ஆர் ரஹ்மான் சாருக்கு நன்றி. நான் தமிழ்ப்பையன் தெலுங்கு இல்லை. சின்ன வயதில் அம்மா கலைஞன் என்றால் யார் எனக்கேட்டபோது என் அம்மா கமல் சாரை காட்டினார்கள். அவர் முன்னால் இன்று இருப்பது மகிழ்ச்சி. சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் இந்தப்படம் ஒரு டீக்கடையில் ஆரம்பித்தது. அதே நண்பர்கள் இந்தப்படத்தில் இருப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. என் தந்தை இன்று இல்லை,அம்மாவுக்கு ப்ரைன் ட்யூமர், அம்மா நீ வர முடியவில்லையே எனக்கேட்டேன், கமல் சார் வருவாருல்ல, நீ போ என அனுப்பி வைத்தார்கள். உங்களை பார்த்து தான் அனைத்தையும் நாங்கள் கற்றுக்கொண்டோம். உங்களை பார்த்து தான் தவறு செய்யாமல் இருக்கிறோம். எங்கள் ஆசானாக இருப்பதற்கு உங்களுக்கு நன்றி. இந்தப்படம் அனைவரது உழைப்பு. என் தந்தையும் தாயுமாக உங்களை நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி. ஒரு நல்ல தமிழ் படத்தில் நான் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.
*இயக்குநர் விஷால் வெங்கட் பேசியதாவது…*
இந்த மேடையில் இங்கு நிற்பதே மகிழ்ச்சி. கமல் சார் ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைப்பது மகிழ்ச்சி. ஒரு பையன் சினிமா கனவு என சொல்லும்போது அவனுக்கு ஆதரவு தர பெற்றோருக்கு ஒரு துணிவு வேண்டும் அதை தந்த என் குடும்பத்திற்கு நன்றி. அடுத்து என் நண்பர்கள் என்னை இதுவரை கூட்டிவந்ததே அவர்கள் தான். என் கதையை நம்பிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஒவ்வொரு கட்டத்திலும் மிகுந்த ஆதரவுடன் அரவணைத்து வழிநடத்தினார்கள். நாசர் சாருக்கு என் மிகப்பெரிய நன்றி, அவரை இயக்குவேன் என நினைக்கவில்லை. கே எஸ் ரவிக்குமார் சாரை இயக்கியதும் அற்புதமான அனுபவம். எல்லா நடிகர்களும் மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார்கள். அதே போல் டெக்னீஷியன்ஸ் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் என் நன்றி. வெற்றிமாறன் சார் பேட்டியில் சொன்ன அறிவுரைகள் இந்தப்படத்தை எடுக்க உதவியாக இருந்தது அவருக்கு நன்றி. ரதன் அருமையான இசையை தந்திருக்கிறார் அவருக்கு நன்றி. தனுஷ் சார் ஒரு பாடல் மட்டும் வந்து பாடி தந்ததற்கு நன்றி. எனக்கு தெரிந்த மனிதர்களால் அவர்களின் அன்பால் உருவானது தான் சில நேரங்களில் சில மனிதர்கள். இது மிக எளிமையான கதை. மனிகண்டன் அண்ணா அருமையான வசனம் தந்தார். ஜெயகாந்தனின் டைட்டிலை வைக்கும் போது என்ன தைரியத்தில் வைத்தீர்கள் என்ற கேள்வி வரும் என்று தெரியும், ஆனால் அதற்கான நியாயம் செய்திருக்கிறோம் என நம்புகிறோம். எல்லோரும் உண்மையாக உழைத்திருக்கிறோம் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம் நன்றி.
எழுத்து & இயக்கம் - விஷால் வெங்கட்
ஒளிப்பதிவு : மெய்யேந்திரன்
இசை : ரதன்
படத்தொகுப்பு: பிரசன்னா GK
வசனம்: மணிகண்டன் K
கலை: A. பெலிக்ஸ் ராஜா & மனோஜ் குமார்
நடன அமைப்பு : தினேஷ் & ஶ்ரீகிரிஷ்
புரடக்சன் எக்ஸிக்யூட்டிவ்ஸ் : ஹக்கீம் சுலைமான் & SN அஷ்ரஃப்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
தயாரிப்பு : அஜ்மல் கான் & ரேயா