மறைந்த திருமதி. புஷ்பா ஐசரி வேலன் திருவுருவ படத்திற்கு நடிகர் திரு. கமலஹாசன் மலர் தூவி அஞ்சலி

 


தமிழக முன்னாள் துணை அமைச்சர் அமரர் திரு. ஐசரி வேலன் அவர்களின் துணைவியாரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷ் அவர்களின் தாயாருமான *திருமதி. புஷ்பா ஐசரி வேலன் (75) அவர்கள்* நேற்று காலை இயற்கை எய்தினார். 



அரசியல் தலைவர்கள், தமிழக அமைச்சர்கள், பல்கலைக்கழக வேந்தர்கள், தொழில் அதிபர்கள், திரைத்துறையினர் என பலதரப்பினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.


இன்று சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், உலக நாயகன், பத்ம பூஷன் திரு கமலஹாசன் அவர்கள் இன்று மாலை சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு நேரில் வருகை புரிந்து அம்மா திருமதி. புஷ்பா ஐசரி வேலன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, Dr. ஐசரி K. கணேஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். உடன் தயாரிப்பாளர் திரு. மகேந்திரன் அவர்கள்.

Popular posts from this blog

Web Series Review: Aindham Vedham

Film Review: 7G The Dark Story

Movie Review : Inga Naan Thaan Kingu