Game Changer teaser released!

 குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர் வெளியீடு!



ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நாள் வந்துவிட்டது! குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்  கூட்டணியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், நேற்று லக்னோவில் சனிக்கிழமை (நவம்பர் 9, 2024) பெரும் ஆரவாரம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது.  டீசர் ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடி  என்டர்டெய்னரில் கலக்குகிறது.


பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான  ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், அதிரடி விஷுவல் மற்றும் கலக்கலான ஸ்டைலில்  ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது !  இந்த டீசரில் ராம் சரண் சக்திவாய்ந்த அதிகாரி (ஐஏஎஸ் அதிகாரி) மற்றும் சமூகத்திற்காக ஏதாவது செய்ய விரும்பும் உற்சாகமான இளைஞன் என இரட்டை வேடத்தில் கலக்குகிறார்.


ஒரு நிமிடம் 30 வினாடிகள் கொண்ட டீசர்,  படத்தின் அரசியல் பின்னணி, கதைக்களத்தின் மையத்தை அறிமுகப்படுத்துவதுடன், படம் பற்றிய ஆவலை அதிகரிக்கிறது. பிரம்மாண்ட ப்ளாக்பஸ்டர் படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கரின் முத்திரை, ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது. கண்கவர் ஃப்ரேம்கள் , அதிரடி ஆக்சன், மனம் மயக்கும் இசை என டீசர் படம் முழுமையான  என்டர்டெய்னராக இருக்குமென்பதை உறுதி செய்கிறது. இயக்குநர் ஷங்கர் நடிகர் ராம் சரணை, இதுவரை இல்லாத அளவில் வெகு ஸ்டைலீஷாக காட்சிப்படுத்தியுள்ளார். 



ஒருபுறம் படம் அதிரடி ஆக்‌ஷன் திரில்லராகத் தோன்றினாலும், மறுபுறம், இது பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த சினிமா அனுபவமாக இருக்கும் என்பதை டீசர் உறுதியளிக்கிறது.  எஸ்.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது,  அதே வேளையில் எஸ்.தமனின் அட்டகாச இசை உணர்வுப்பூர்வமான நம்மைத் தாக்குகிறது. நடிகை கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி, நவீன் சந்திரா, சுனில் மற்றும் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் பங்களிப்பில், ‘கேம் சேஞ்சர்’ ஒரு அசத்தலான என்டர்டெய்னராக இருக்கும்.



https://www.youtube.com/watch?v=OXe7N7-xMKM&list=PLE8HD4kzsGyZpnKlqY_2UHVJeRCsJQcyj


டீசர் பிரமிக்க வைக்கும் காட்சிகள், அழுத்தமான கதைக்களம் மற்றும் ராம் சரணின் ஸ்டைலான தோற்றம் எனப் பார்வையாளர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. "ஐ ம் அன் பிரடிக்டபிள்" ( நான் யூகிக்க முடியாதவன் )  என டீசரில் ராம் சரண் சொல்லும் பஞ்ச் டயலாக்  மேலும் ஆவலைத் தூண்டுகிறது. டீசர் வெளியான வேகத்தில் இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. 


ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் சார்பில்,  தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படம்,   ஜனவரி 10, 2025 அன்று, தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.  கேம் சேஞ்சர் ராம் சரணின் திரை வாழ்க்கையின் மிகப்பெரிய படமாக உருவாகியுள்ளது, மேலும் ஏஏ பிலிம்ஸ் வட இந்திய விநியோக உரிமையைச் சாதனை விலைக்கு வாங்கிய பிறகு, படத்தின் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.  


நடிகர்கள்: ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், ஜெயராம், சுனில், நவீன் சந்திரா மற்றும் பலர்.


தொழில்நுட்ப வல்லுநர்கள் 

இயக்கம் : ஷங்கர் சண்முகம் 

தயாரிப்பாளர்கள்: தில் ராஜு, சிரிஷ்,

எழுத்தாளர்கள்: சு.வெங்கடேசன், விவேக்

கதைக்களம்: கார்த்திக் சுப்புராஜ் 

இணை தயாரிப்பாளர்: ஹர்ஷித் 

ஒளிப்பதிவு: எஸ்.திருநாவுக்கரசு 

இசை: எஸ்.தமன் 

வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா 

லைன் புரடியூசர்ஸ் : நரசிம்ம ராவ். என், எஸ்.கே.ஜபீர் 

கலை இயக்கம் : அவினாஷ் கொல்லா 

சண்டைக் காட்சி இயக்குநர் : அன்பறிவு 

நடன இயக்குநர்: பிரபு தேவா, கணேஷ் ஆச்சார்யா, பிரேம் ரக்ஷித், போஸ்கோ மார்டிஸ், ஜானி, சாண்டி 

பாடலாசிரியர்கள்: ராமஜோகையா சாஸ்திரி, ஆனந்த ஸ்ரீராம், காசர்லா ஷியாம் 

பேனர்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்,

மக்கள் தொடர்பு  - சதீஷ் (AIM)

Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Movie Review : Mathimaran

Film Review: 7G The Dark Story