எஸ்.எஸ். ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும், இன்னும் தலைப்பிடப்படாத மாபெரும் திரைப்படம் “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !

 


பாகுபலி மற்றும் RRR என இரண்டு உலகளாவிய பிளாக்பஸ்டர் வெற்றிகளுக்குப் பிறகு, மகேஷ் பாபு,  பிரியங்கா சோப்ரா நடிப்பில், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரியதாக உருவாகி வரும் புதிய படம் — “Globe Trotter”.



நீண்ட நாட்களாக காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது! ரசிகர்களின் மனதை மயக்கும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, மகேஷ் பாபு நடிப்பில்,  உருவாகும்  மாபெரும் படைப்பிலிருந்து பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள கும்பா (KUMBHA) கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே – தீவிரமானதாகவும், சக்திவாய்ந்ததாகவும், சினிமா அழகியலோடும் அமைந்துள்ளது.


இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் முதல் அம்சமாக, வில்லனாக நடிக்கும் பிரித்விராஜ் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் “Globe Trotter” எனும் உலகில் “கும்பா”வாக மாறியுள்ளார். இந்தப் படத்தில் அவர் இதுவரை நாம் பார்த்ததற்கு மாறாக, கொடூரமான, இரக்கமற்ற, கட்டுப்படுத்தும் திறமை கொண்ட வில்லனாக தோன்றுகிறார். போஸ்டரில் அவர் ஒரு ஹைடெக் வீல் சேரில் அமர்ந்தபடி காணப்படுகிறார் – கதாப்பாத்திர போஸ்டர் லுக் புதிய நியூ ஏஜ்  வில்லனாக அவரை அறிமுகப்படுத்துகிறது.


“Globe Trotter” என்பது ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபுவின் கூட்டணியில் உருவாகும், மிகப்புதுமையான ஒரு சாகச உலகம் ஆகும். இந்த இருவரின் கூட்டணியை ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்தனர், தற்போது அந்த எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. ராஜமௌலி ஏற்கனவே இந்திய சினிமாவை உலக வரைபடத்தில் பதித்துள்ளார், இப்போது தென்னிந்திய முன்னணி நட்சத்திரமான மகேஷ் பாபுவுடன் இணையும் இந்தக் கூட்டணி, அடுத்த பெரிய நிகழ்வாக மாறியுள்ளது. மேலும் தற்போதைய நிகழ்வு படத்தின் புரமோசன்  பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது.


இந்த கதாப்பாத்திர போஸ்டர் ராஜமௌலி எப்போதும் எதிலும் தனிச்சிறப்பு கொண்டவர்.  இந்த போஸ்டர் அவரது தனித்துவமான முத்திரையுடன் வெளியாகியுள்ளது. தற்போது அதைக் காட்டிலும் அதிகமான ஹைப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய அளவில் புகழ்பெற்ற, ஆஸ்கர் வென்ற RRRக்கு பிறகு வெளியாகும் இந்தப் படம் குறித்து, எதிர்பார்ப்பு மிக அதிகமாகவுள்ளது. Globe Trotter லாஞ்ச் நிகழ்ச்சி இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய நிகழ்வாக இருக்கப் போகிறது. அது நவம்பர் 15 அன்று ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. அந்த நாளுக்கான தயாரிப்புகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதால், ரசிகர்கள் ஏற்கனவே அந்த உற்சாகத்தை உணரத் தொடங்கியுள்ளனர்.


முன்னதாக ராஜமௌலி தனது X (Twitter) பக்கத்தில் கதாப்பாத்திரங்களின் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவித்திருந்தார், தற்போது அது வெளியானதும் இணையம் முழுவதும் தீயாக பரவி பாராட்டுக்களை பெற்று வருகிறது. பிரித்விராஜின் அந்த தீவிரமான மற்றும் மிரட்டும் வகையிலான தோற்றம், ராஜமௌலியின் அடுத்த உலக அளவிலான சாகச கற்பனைக்குப் மிகப் பொருத்தமானதாக வெளிப்படுகிறது.


இந்த கும்பா  கதாப்பாத்திர போஸ்டர் வெளியீடு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் #GlobeTrotter நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பாக வெளிவந்துள்ளது. அந்த நிகழ்ச்சி நவம்பர் 15 அன்று ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது.


முன்னதாக ராஜமௌலி தனது பதிவில்..,


“மூன்று முக்கிய கதாபாத்திரங்களுடன் கிளைமேக்ஸ் ஷூட் நடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் #GlobeTrotter நிகழ்வுக்கான தயாரிப்புகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை எப்போதும் செய்யாத அளவுக்கு ஒன்றை முயற்சி செய்கிறோம். நவம்பர் 15 அன்று அதை நீங்கள் அனுபவிப்பதை காண ஆவலுடன்  காத்திருக்கிறேன் .”


இயக்குநர்  தெரிவித்ததாவது, தற்போது நடந்து வரும் கிளைமேக்ஸ் காட்சி மூன்று முக்கிய கதாப்பாத்திரங்கள் பங்கேற்க மிகப்பெரிய அளவில் எடுக்கப்படுகிறது, மேலும் GlobeTrotter  நிகழ்வுக்கான தயாரிப்புகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தயாரிப்பு குழுவின் தகவல்படி, இது ராஜமௌலி திரைப்படங்களில் இதுவரை எடுக்கப்பட்ட மிக விரிவான, மிகப்பெரிய காட்சிகளில் ஒன்றாக இருக்கும்.


பிரித்விராஜ் சுகுமாரனின் கதாப்பாத்திர போஸ்டர் வெளியீடு இந்த வார “அனவுன்ஸ்மெண்ட் வீக்” ( Announcement week) உடைய தொடக்கமாகும், இதில் ராஜமௌலி கூறியபடி, நவம்பர் 15 நிகழ்வுக்கு முன் பல அப்டேட்களும் சர்ப்ரைஸ்களும் வெளியாகவுள்ளன.


இந்தப் படத்தின் புரோமோஷன் அப்டேட்கள் பல கட்டங்களாக வெளியிடப்படவுள்ளது, முதலில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், அதன் பிறகு ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெறும் “மாபெரும் கொண்டாட்ட நிகழ்வில்” முடிவடையும் என்று உள் வட்டாரங்கள் கூறுகின்றன.

Popular posts from this blog

Web Series Review: Aindham Vedham

Shakthi Thirumagan– A Landmark Film in Vijay Antony’s Career

Movie Review : Aan Paavam Pollathathu