பிரைம் வீடியோவின் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவரிலிருந்து ஒரு புதிய காட்சி ‘நியூமெனர் என்பது கடல் சார்ந்த ஒரு சமூகம்,' என்று அரசி மிரியல் கூறுகிறார்

 

அமேசான் ஒரிஜினலில் வரவிருக்கும் தொடரான, தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர், குறைவாக அறியப்பட்ட மிடில்-எர்த்தின் இரண்டாம் யுகத்தின் பயணத்தில் பார்வையாளர்களை அழைத்து செல்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பிரைம் வீடியோ தொடரானது ஒரு புது கதையை அறிமுகம் செய்கிறது, ஹார்ஃபூட்கள் குறித்து வெளிப்படுத்துகிறது, இதுவரை கண்டிராத தீவு ராஜ்ஜியமான நியூமெனருக்குப் பயணிக்கிறது. பிரைம் வீடியோ வெளியிட்ட சமீபத்திய காட்சி, கலாட்ரியல் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மோர்ஃபிட் கிளார்க், நியூமெனரை, "மனிதர்களின் உலகங்கள் அனைத்தையும் தாண்டி மேற்கில் அமைந்துள்ளது" என அறிமுகம் செய்கிறது.



சமுத்திரத்தால் சூழப்பட்டுள்ள இந்த தீவு ராஜ்ஜியம், பிரம்மாண்டமான வரலாற்றுடன் அழகிய காட்சிகளை வழங்குகிறது. நியூமெனரின் அரசியான மிரியல் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சிந்தியா அடாய்-ராபின்சன், அதை "அதிகாரத்தின் உச்சியில் உள்ள மிகவும் கடல் சார்ந்த சமூகம்" என்று விவரிக்கிறார். நியூமெனர் தீவின் ஆலோசகரான பாராசன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் டிரிஸ்டன் கிராவெல் எப்படி "தீவின் பாதி மக்கள் எல்விஷ் கலாச்சாரத்தைப் பின்பற்றவும், அதே நேரத்தில் மற்றவர்கள் தங்களின் வழிகளில் செல்லவும் விரும்புகிறார்கள்" என்பதை விளக்குகிறார். நியூமெனர் தீவின் மாலுமியான எலெண்டில் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் லாயிட் ஓவன், வரவிருக்கும் அவல நிகழ்ச்சியை முன்கூட்டியே அறிந்து, "திரும்பி சென்று அதன் சிகரத்தில் புதிய வளத்தினை கண்டுபிடிப்பது அசாதாரணமானது, ஆனால் அது உச்சியில் உள்ளது" என்று நினைக்கிறார்.


ஜே.ஆர்.ஆர். டோல்கீன் அவர்களின் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் மற்றும் ஹாப்பிட்டிற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெறும் இந்த தொடர், நியூமெனரின் வீழ்ச்சி உட்பட முக்கியமான நிகழ்வுகளைச் சுற்றி நடக்கிறது.  தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவரின் புதிய எபிசோட்கள் செப்டம்பர் 2, 2022 முதல், பிரைம் வீடியோவில் ஒவ்வொரு வாரமும் ஆங்கிலம்,இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் வெளியிடப்படும்.


 



Popular posts from this blog

Karthi blessed with baby boy !

Brindha Shivakumar dubs for Alia Bhatt in Brahmastra Tamil version!

Web Series Review - Ayali