Suriya -Amazon Prime Video grand collaboration!
Amazon Prime Inks Landmark Deal with Suriya’s 2D Entertainment:
Four 2D Entertainment Movies to Premiere Directly on Prime Video in the next four months !
The four movie slate includes the world premieres of highly anticipated titles such as Jai Bhim, Udanpirappe, Oh My doG and Raman Aandalum Ravanan Aandalum
The movies feature some of the most respected talent from the Tamil film industry along with fresh faces. The technical crew also brings together new talent and well-known names in the industry.
Amazon Prime Video India today announced a first-of-its kind exclusive deal with Suriya’s 2D Entertainment. As part of this collaboration, the next four Tamil movies from 2D Entertainment will premiere directly on Prime Video worldwide, over the next 4 months.
Delivering on its commitment to program for the diverse entertainment choices of Indian consumers, this association will further strengthen the Tamil language content portfolio on Amazon Prime Video, bringing the best of homegrown stories to a global audience.
This collaboration will have 2D Entertainment’s most anticipated titles mark their direct-to-service world premieres on Amazon Prime Video. From murder mystery to comedy to family drama, the diverse content slate includes films across genres produced by actors Jyotika and Suriya.
The titles star some of the most prolific faces from the Tamil movie industry. The line-up includes titles like Jai Bhim, a legal drama starring Suriya along with Prakash Raj, Rao Ramesh, Lijomol Jose, Rajisha Vijayan and Manikandan; Udanpirappe a family drama starring Sasi Kumar, Jyotika, Samudrakani, Soori, Kalaiyarasan, Niveditha Sathish and Siddhu; Oh My doG a kid’s film starring Arnav Vijay, Arun Vijay, Vijay Kumar, Mahima Nambiar and Vinay Rai; as well as Raman Aandalum Ravanan Aandalum a satire comedy drama starring Ramya Pandian, Vani Bhojan, Mithun Manickam and Vadivel Murugan.
“At Prime Video, we have one of the largest libraries of Tamil movies in the country,” said Vijay Subramaniam, Director and Head of Content, Amazon Prime Video. “We are thrilled to kick-start this milestone collaboration with Suriya’s 2D Entertainment, which will bring the next four, highly awaited movies, from 2D Entertainment directly to the safety and comfort of consumer homes globally. This association comes on the back of the incredible love that 2D Entertainment’s Soorarai Pottru and Ponmangal Vandhal received from audiences worldwide. Our local language movies, over the past year, have broken viewership records to register 50% of audiences outside their home state. International viewers accounted for up to 20% of total audiences of local language direct-to-service films. We are thrilled to lead the charge by enabling great, home-grown, local language stories find audiences across the world, made possible because of our strong relationship with creative powerhouses such as 2D Entertainment.”
Suriya, Founder of 2D Entertainment, Producer & Actor said, “The past year has been transformative. Given unprecedented circumstances, we innovated on different models of release. Amazon emerged as the chosen streaming service for 2D’s latest film launches. From Ponmangal Vandhal to Soorarai Pottru, these beautiful tales found audiences and resonance not just in India, but across the world. We are happy to take this collaboration even further with Amazon Prime Video.”
A Sneak-peek into the upcoming 2D Entertainment slate of titles:
Jai Bhim (November 2021)
Directed by Tj Gnanavel, Jai Bhim is a murder mystery that highlights the story of a tribal couple Senggeni and Rajakannu who have great affection and love towards each other. Rajakannu is arrested on false charges by the Police, and he goes missing from the Police Station. Senggeni starts searching for her husband. She seeks the help of Chandru, a famous High Court lawyer, who takes up this challenging case to get justice for the innocent tribal woman. Will Chandru succeed in his endeavor? DOP – SR. Kadhir, Music – Sean Roldan, Art – K. Kadhir, Editor – Philomin, Costumes – Poornima Ramasamy.
Udanpirappe (October 2021)
Directed by Era Saravanan, Udanpirappe showcases the epitome of unconditional love between the siblings, Vairavan and Mathangi who are separated due to difference in opinion. While Vairavan believes justice must be fought over, Mathangi’s husband Sargunam insists on going by the law diligently. Over the years, the rift between them aggravates and all attempts by Mathangi to unite the family turn futile. In the end, will Mathangi unite her family in this emotional family drama? Music – Imman, DOP – Velraj, Editor – Ruben, Art – Mujipur, Costumes – Poornima Ramasamy.
Oh my doG (December 2021)
Directed by Sarov Shanmugam, this movie is a scintillating magical film for children that talks about their world, their desires, courage, friendship, unconditional love, bravery and loyalty. A pup is ordered to be killed by its breeder, because of a congenital defect. But it eventually escapes from the killers. On the other side, is a boy, hated by everyone - he is not a good student, nor a lovely boy next-door but a very happy- go-lucky kid. The pup and the boy meet - will they end up winning the hearts of others and prove themselves worthy? That premise forms the crux of the story. DOP – Gopinath, Music – Nivas Prasanna, Editor – Mega, Art – Michael, Costumes – Vinothini Pandian.
Raman Aandalum Ravanan Aandalum (September 2021)
Directed by Arisil Moorthy, this comedy drama is about a village that is breaking news on all television channels across India, but the people of that village don’t have electricity to watch TV. Kunnimuthu, a 35-year-old innocent farmer loses his bulls named Karuppan and Vellaiyan, who were like children to him and his wife Veerayi. While he starts searching for his bulls with his friend Manthinni, he accidentally meets Narmatha a reporter, who helps him. In midst of a great struggle, the bulls will have to be found and the village must be developed as well! DOP – Sukumar, Music – Krish, Editor – Saravanan, Art – Mujipur, Costumes – Vinothini Pandian.
சூரியாவின் 2டி நிறுவனத்துடன் அமேசான் பிரைம் நிறுவனம் ஒப்பந்தம்
எதிர்வரும் நான்கு மாதங்களில் நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் நான்கு படங்கள் நேரடியாக அமேசான் பிரேம் வீடியோவில் வெளியாகிறது என்பதை அமேசான் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது. இதுதொடர்பாக 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அமேசான் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
மேலும் அந்நிறுவனம் நேரடியாக அமேசன் பிரைம் வீடியோவில் திரையிடப்படும் திரைப்படங்களின் பட்டியலில் 'ஜெய் பீம்', 'உடன்பிறப்பே', 'ஓ மை டாக்' மற்றும் 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' ஆகிய படங்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த திரைப்படங்களில் தமிழ் திரை உலகின் திறமையான நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
அமேசான் பிரைம் வீடியோ இந்தியா நிறுவனம் இன்று சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடனான முதல் பிரத்யேக ஒப்பந்தத்தை அறிவிக்கிறது. இதில் ஒரு பகுதியாக அடுத்த 4 மாதங்களில் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் நான்கு திரைப்படங்கள் உலகளாவிய அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக திரையிடப்படுகிறது. இந்திய பார்வையாளர்களின் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களின் தேடல்களுக்கான தேர்வு திட்டங்களில் தங்களுடைய அர்ப்பணிப்பை வழங்கும் இந்த சங்கமம், அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் மொழி உள்ளடக்க தொகுப்பை மேலும் வலிமைப்படுத்தி, சிறந்த உள்நாட்டு கதைகளை உலகளாவிய பார்வையாளர்களுக்கு கொண்டு செல்கிறது.
அமேசான் பிரைம் வீடியோவும், 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வகையில் அவர்களின் நேரடி சேவையை வழங்கி வருகிறது. திரில்லர், சஸ்பென்ஸ், காமெடி, ஃபேமிலி டிராமா என பல்வேறு ஜானர்களில் தயாராகி, பட்டியலிடப்பட்ட படங்களில் இந்தியாவின் மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவரான ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்த திரைப் படங்களும் இடம்பிடித்திருக்கிறது. இந்த திரைப்படங்களில் இந்தியாவின் தலை சிறந்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பிரகாஷ்ராஜ், ரமேஷ் ராவ், லிஜாமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் மணி கண்டன் ஆகியோருடன் சூர்யா நடித்த 'ஜெய் பீம்' போன்ற படங்களும் உள்ளன.
சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ் மற்றும் சித்து ஆகியோர் நடித்த குடும்ப ஃபேமிலி டிராமா ஜானரில் தயாரான 'உடன்பிறப்பே' ( Udanpirappu) என்ற படமும் உள்ளது.
அருண் விஜய், அர்ணவ் விஜய், விஜயகுமார், மகிமா நம்பியார் மற்றும் வினை ராய் நடித்த குழந்தைகளை மையப்படுத்திய 'ஓ மை டாக்’ ( Oh My Dog) என்ற படமும் இடம் பெற்றிருக்கிறது.
ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்த நையாண்டி நகைச்சுவையை மையப்படுத்திய 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' ( Raman Aandalum Ravanan Aandalum )என்ற படமும் இப்பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.
'அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் திரைப்படங்களி மிகப்பெரிய நூலகம் ஒன்று எங்களிடம் உள்ளது' என அமேசான் பிரைம் வீடியோவின் இயக்குனரும், உள்ளடக்க தலைவருமான விஜய் சுப்பிரமணியம் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,' சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் உடன் நாங்கள் மேற்கொண்ட இந்த ஒப்பந்தம் திரையுலகில் புதிய மைல்கல் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். அத்துடன் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் நான்கு திரைப்படங்களை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திலிருந்து நேரடியாக உலகளாவிய திரைப்பட பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்கிறோம். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 'சூரரை போற்று' மற்றும் 'பொன்மகள் வந்தாள்' ஆகிய படங்களுக்கு உலகளவில் பார்வையாளர்களிடமிருந்து எதிர்பார்க்காத அளவில் அன்பும், ஆதரவும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து உள்ளூர் மொழியிலான திரைப்படங்கள் கடந்த வருடத்தில் 50 சதவீத பார்வையாளர்களை சென்றடைந்து புதிய சாதனையை படைத்திருக்கிறோம். இவர்கள் தமிழக எல்லையை கடந்த பார்வையாளர்கள் என்பது குறிப்பிடதக்கது. உள்ளூர் மொழியில் நேரடியாக படங்களை வெளியிடுவதன் மூலம் 20 சதவீதம் வரை சர்வதேச பார்வையாளர்கள் இருந்தனர் என்பதும் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
2டி என்டர்டெய்ன்மென்ட் போன்ற ஆக்கபூர்வமான பட நிறுவனத்துடனான எங்கள் வலுவான உறவு மேலும் தொடர்கிறது. இதன் காரணமாக உள்நாட்டு, உள்ளூர் மொழியில் தயாராகும் கதைகளை, அதற்கான பார்வையாளர்களை கண்டறிந்து அவர்களிடத்தில் எடுத்துச் சென்றடைய வைப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.' என்றார்.
2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைவரான சூர்யா இதுதொடர்பாக பேசுகையில்,' கடந்த ஆண்டு பெரும் மாற்றமாக அமைந்தது. முன்னோடிகள் இல்லாத சூழ்நிலையில், திரைப்பட வெளியீட்டின் பல்வேறு புதுமைகளை நாங்கள் மேற்கொண்டோம். 2டி நிறுவனத்தின் அண்மைய திரைப்பட வெளியீடுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ட்ரீமிங் சேவையாக அமேசான் இருக்கிறது. பொன்மகள் வந்தாள் முதல் சூரரைப்போற்று வரை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பார்வையாளர்களை சென்றடைந்தது. இதற்கு காரணமான அமேசான் பிரைம் வீடியோ உடன் தொடர்ந்து தொழில்ரீதியான ஒத்துழைப்பை நீட்டிப்பதில் நாங்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறோம்' என்றார்.
2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் அதன் விவரங்களின் பட்டியல்கள்
உடன்பிறப்பே (அக்டோபர் 2021)
இயக்குனர் இரா சரவணன் இயக்கிய திரைப்படம் ‘உடன்பிறப்பே’.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் உடன்பிறப்புகள் வைரவன் மற்றும் மாதங்கி ஆகியோருக்கு இடையேயான நிபந்தனையற்ற அன்பின் முக்கியத்துவத்தை இத்திரைப்படம் வெளிப்படுத்துகிறது. நீதிக்காக வன்முறை வழியில் போராட வேண்டும் என வைரவனனும், சட்ட விதிகளின் படி விடாமுயற்சியுடன் பயணிக்க வேண்டும் என மாதங்கியின் கணவர் சற்குணமும் வலியுறுத்துகின்றனர். பல ஆண்டுகளாக அவர்களுக்கிடையேயான விரிசலை நீக்கவும், குடும்பத்தை ஒன்றிணைப்பதற்காகவும் மாதங்கி எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பயனற்றதாகிறது. இறுதியில் இந்த குடும்ப ஒற்றுமைக்காக மாதங்கி எடுக்கும் உணர்ச்சிகரமான முடிவுதான் ‘உடன்பிறப்பே’. இசை =டி.இமான், ஒளிப்பதிவு =வேல்ராஜ், படத்தொகுப்பு= ரூபன், கலை இயக்கம் =முஜிபூர், உடைகள் =பூர்ணிமா ராமசாமி.
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் (செப்டம்பர் 2021)
இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கிய இந்த நகைச்சுவைத் திரைப்படம், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒரு கிராமத்தைப் பற்றிய செய்தி வெளியாகிறது. ஆனால் அந்த கிராம மக்களுக்கு டிவி பார்க்க மின்சாரம் இல்லை. குனிமுத்து 35 வயதான அப்பாவி. விவசாயி. கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற தனது காளைகளை இழக்கிறார். அவருக்கும் அவரது மனைவி வீராயிக்கும் குழந்தைகளைப் போல் அந்த காளைகள் இருந்தது. அவர் தனது நண்பர் மாந்தினியுடன் தனது காளைகளை தேட தொடங்குகையில், அவர் தற்செயலாக நர்மதா என்ற நிருபரை சந்திக்கிறார். அவர் அவர்களுக்கு உதவுகிறார். பெரும் போராட்டத்தின் மத்தியில் காளைகளை கண்டுபிடிக்க வேண்டும். கிராமத்தையும் மேம்படுத்த வேண்டும். இது நடந்ததா? என்பதே இத்திரைப்படத்தின் கதை. ஒளிப்பதிவு சுகுமார், இசை கிரீஷ், படத்தொகுப்பு சரவணன், கலை முஜிபூர், உடைகள் வினோதினி பாண்டியன்.
ஜெய் பீம் (நவம்பர் 2021) த,செ.ஞானவேல் இயக்கிய ‘ஜெய் பீம்’. ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம். இது பழங்குடியின தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜகண்ணு ஆகியோரின் வாழ்வியலை எடுத்துரைக்கிறது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பாசத்துடனும், அன்புடனும் வாழ்ந்து வருகிறார்கள். ராஜககண்ணு போலீசாரால் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகிறார். அவரது மனைவியான செங்கேணி தன் கணவனை தேடத் தொடங்குகிறாள். இது தொடர்பாக பிரபல உயர்நீதிமன்ற வழக்கறிஞரான சந்துருவின் உதவியை நாடுகிறாள். சந்துரு தனது முயற்சியில் வெற்றி பெறுகிறாரா..? என்பதே ஜெய் பீம் கதை. ஒளிப்பதிவு எஸ்ஆர் கதிர், இசை ஷான் ரோல்டன், கலை கே கதிர் ,படத்தொகுப்பு பிலோமின், உடைகள் பூர்ணிமா ராமசாமி
ஓ மை டாக் (டிசம்பர் 2021)
அறிமுக இயக்குனர் சரோவ் சண்முகம் இயக்கிய இந்த திரைப்படம். குழந்தைகளின் உலகம், அவர்களின் ஆசை, துணிச்சல், தைரியம், நட்பு, நிபந்தனையற்ற அன்பு மற்றும் விஸ்வாசம் குறித்து பேசும் ஒரு அற்புதமான திரைப்படம். பிறவி குறைபாடு காரணமாக ஒரு நாய்க்குட்டியை அதன் எஜமானர்களால் கொல்ல உத்தரவிடப்படுகிறது. ஆனால் அது இறுதியில் கொலையாளிகளிடமிருந்து தப்பிக்கிறது. ஒரு பையன் =அனைவராலும் வெறுக்கப்படுகிறான். நல்ல மாணவன் அல்ல, பக்கத்து வீட்டு அழகான பையனும் அல்ல. ஆனால் மிகவும் மகிழ்ச்சியான =அதிர்ஷ்ட குழந்தை. நாய்க்குட்டியும், அந்த பையனும் சந்திக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களின் இதயங்களை வென்று தங்களை தகுதியுள்ளவர்களாக நிரூபிக்கிறார்களா? என்பதே இப்படத்தின் கதை. ஒளிப்பதிவு கோபிநாத், இசை நிவாஸ் கே பிரசன்னா, எடிட்டர் மெகா, கலை மைக்கேல் ,உடைகள் வினோதினி பாண்டியன