Vijay Milton directs Kannada Star Shivarajkumar in Bhairaghi !

 கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் பைராகி ! Bhairaghi 



கன்னட  திரையுலகில் 35 ஆண்டுகளாக, சூப்பர்ஸ்டாராக வலம்வருபவர் நடிகர் சிவராஜ்குமார், தமிழ் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் "பைராகி" 



திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த  ஆக்சன் கமர்ஷியல் படத்தின், இறுதிகட்ட படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இப்படம் குறித்து நடிகர் சிவராஜ்குமார் கூறியதாவது.. 

 நான் தமிழ் சினிமாவின் ரசிகன். தொடர்ந்து தமிழ் திரையுலகை கவனித்து வருகிறேன். அங்கு வெளியாகும் அனைத்து படங்களையுமே, உடனடியாக பார்த்து விடுவேன். நடிகர் கமல் சாரின் தீவிர ரசிகர் அவரின் படங்களை முதல் நாளில் பார்த்து விடுவேன். தற்போது நடிகர் தனுஷ் மிகச்சிறப்பான படங்களை செய்து வருகிறார். தமிழ் தொழில் நுட்ப கலைஞர்களுடன் பணிபுரிவது எனக்கு எப்போதும்  மிகவும் பிடித்த விசயம். இயக்குநர் விஜய் மில்டனை பல காலமாக எனக்கு தெரியும். இப்படத்தின் கதையை அவர் கூறிய போது, படத்தில் அளவான எமோஷனில் அட்டகாசான ஆக்சன் கலந்து ஒரு அற்புதமான கதை இருந்தது தெரிந்தது. எல்லா தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் கமர்ஷியல் படமாக இது இருக்கும். விஜய் மில்டன் கேமராமேனாக இருந்து கஷ்டப்பட்டு  உயர்ந்த நிலைக்கு வந்துள்ளதால், சினிமா குறித்த தேர்ந்த அறிவு அவரிடம் கொட்டிக்கிடக்கிறது. எதையும் எளிமையாக செய்துவிடும் திறமை அவரிடம் இருக்கிறது. மக்கள் 35 வருடமாக என்னை கொண்டாடி வருகிறார்கள்.அவர்களின் அன்புக்கு உண்மையாக உழைக்க வேண்டுமென நினைக்கிறேன். அவர்கள் ரசிக்கும்படி படங்கள் தர கடினமாக உழைப்பேன். இந்தப்படமும் அவர்கள் கொண்டாடும் படைப்பாக இருக்கும் என்றார். 






Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Movie Review : Mathimaran

Movie Review: Maal