அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’

 

துல்கர் சல்மான் =ஹனு ராகவபுடி = வைஜெயந்தி மூவிஸ் =ஸ்வப்னா சினிமா கூட்டணியில் உருவான ‘சீதா ராமம்’, அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்தது.


துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரின் காவிய காதல் கதையான ‘சீதா ராமம்’ அமெரிக்க பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தத் திரைப்படம் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற முன்பதிவுடன் ஒரு மில்லியன் டாலர்களை வசூலித்து, புதிய வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.



உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களை வென்ற ‘சீதா ராமம்’ வெளியான முதல் வாரத்தில் இந்திய மற்றும் வெளிநாடுகளில் சிறப்பான வசூல் சாதனையை பதிவு செய்திருக்கிறது. புதிய திரைப்படங்களின் வெளியீடுகள் இருப்பினும், ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளம் என அனைத்து பகுதிகளிலும் இரண்டாவது வாரத்திலும் சிறப்பான வசூலை ஈட்டி வருகிறது. மேலும் சுதந்திர தின விடுமுறையான இன்றும் இப்படத்தில் வசூல் வேட்டை தொடரும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு தரமான படைப்பிற்கு, மக்களின் ஆதரவு என்றென்றும் உண்டு என்பது, ‘சீதா ராமம்’ படத்தின் வசூல் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

போருக்கு இடையில் நடைபெறும் காதல் கதையின் உணர்ச்சிகரமான பயணம் ரசிகர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை அளித்திருக்கிறது.விமர்சகர்களும், பார்வையாளர்களும் இந்த காவிய காதல் படைப்பை ரசித்து வருகிறார்கள். அண்மையில் விமர்சனத்தையும், வசூலையும் ஒருமித்து பெற்ற படைப்பு என்றால் அது ‘சீதா ராமம்’ மட்டும் தான் என்பது, ரசிகர்கள் அளித்து வரும் தீர்ப்பு.  



முன்னணி கலைஞர்களான துல்கர் சல்மான் =மிருணாள் தாக்கூர் திரையில் நிகழ்த்தும் மாயாஜாலம், இயக்குநர் ஹனு ராகவபுடியின் தனித்துவமான எழுத்து மற்றும் பிரத்யேகமான இயக்கம்= விஷால் சந்திரசேகரின் அற்புதமான மயக்கும் இசை =பி. எஸ். வினோத்தின் வியக்க வைக்கும் காட்சி அமைப்பு =வைஜெயந்தி மூவிஸ் =ஸ்வப்னா சினிமா பட நிறுவனங்களின் தரமான தயாரிப்பு... ஆகிய பல விசயங்கள் இணைந்து இப்படத்தை உன்னதமான படைப்பாக மாற்றி இருக்கிறது.

Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Movie Review : Mathimaran

Film Review: 7G The Dark Story