கர்நாடக சக்கரவர்த்தி' டாக்டர் சிவராஜ் குமாரின் பெயரிடப்படாத புதிய படத்தின் கேரக்டர் லுக் வெளியீடு

 '


தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரபலமான கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான 'கர்நாடக சக்கரவர்த்தி' டாக்டர். சிவராஜ்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கேரக்டர் லுக்கை, அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளனர். 





'இடி மின்னல் காதல் 'படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் பாலாஜி மாதவன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிகர் சிவராஜ்குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் கன்னட திரையுலகின் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்வெஸ்டிகேட்டட் வித் ஆக்சன் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரித்திக் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சூரஜ் சர்மா - கிருஷ்ணகுமார். பி -சாகர் ஷா - ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். 


மேலும் இந்த போஸ்டரில் பேருந்து ஒன்றில் நடைபெறும் குற்ற சம்பவம் தொடர்பாக உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் விசாரிக்கும் விசாரணை தொடர்பான விபரங்கள் இடம்பிடித்திருப்பதால்... இந்த திரைப்படம் புலனாய்வு சம்பந்தப்பட்ட விறுவிறுப்பான திரைக்கதையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் இந்தப் படத்தின் டைட்டில் விரைவில் வெளியிடப்படும்  என்ற அறிவிப்பும் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களுக்கு படத்தைப் பற்றிய ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் நடத்த படக்குழு திட்டமிடப்பட்டிருக்கிறது. 


இதனிடையே திரையுலகில் நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அனுபவம் வாய்ந்த நட்சத்திர நடிகரான சிவராஜ்குமார் முதன்முறையாக உதவி காவல் ஆய்வாளர் வேடத்தில் நடித்திருப்பதாலும்... இத்திரைப்படம் பேருந்து பயணத்தில் நடைபெறும் குற்ற சம்பவம் தொடர்பான புலனாய்வு விசாரணையை மையப்படுத்தி இருக்கும் என்பதாலும்... ரசிகர்களிடத்தில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

Film Review: 7G The Dark Story

Movie Review : Jama

Movie Review : Pechi