Shankar visits Ram Pothineni on RAPO sets!

 RAP019 படப்பிடிப்பை  படபிடிப்பை பார்வையிட்ட பிரமாண்ட இயக்குநர் ஷங்கர்



இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில்  தெலுங்கு திரை முன்னணி நாயகன் ராம் பொதினேனி  நடிக்கும்  #RAPO19 படப்பிடிப்பிற்க்கு ஆச்சர்யகரமாக   பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் வருகை புரிந்தார். 



இயக்குநர் லிங்குசாமி, நாயகன் ராம் பொதினேனி, நாயகி கீர்த்தி ஷெட்டி, நடிகை நதியா மற்றும் நடிகர்கள், தொழில் நுட்ப குழுவினர் அனைவரும் இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளித்தனர். இயக்குநர் ஷங்கர் படப்பிடிப்பு தளத்தில், படத்தினுடைய பாடலை கேட்டுவிட்டு, மிக அழகான மெலோடியான பாடல் என பாராடினார். மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். 


தயாரிப்பாளர் ஶ்ரீனிவாசா சித்தூரி  Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில்  இப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார். அரசு அறிவித்துள்ள கோவிட் சம்மந்தமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், முறையாக கடைப்பிடிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 



விரைவில் திரைக்கு கொண்டுவரும் நோக்கத்தில், முழுக்க முழுக்க, ஸ்டைலீஷ், ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகும் RAPO19 படத்தின் படப்பிடிப்பு, வெகு தீவிரமான வேகத்தில் நடைபெற்றுவருகிறது.

Popular posts from this blog

Karthi blessed with baby boy !

Web Series Review - Ayali

Brindha Shivakumar dubs for Alia Bhatt in Brahmastra Tamil version!