South Indian Cinema PRO Union office bearers meet CM !

 *சங்க உறுப்பினர்களின் நலனுக்கான சில கோரிக்கைகளை முன் வைத்து தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்களின் நிர்வாகிகள் 11.10.2021 திங்களன்று தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மு.பெ சுவாமிநாதனை சந்தித்தனர்.*



தலைமைச் செயலகத்தில் 11th காலை 11.30 மணி அளவில் நடந்த இந்த சந்திப்பில் யூனியன் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் யுவராஜ்,இணைச் செயலாளர் கணேஷ்குமார் ஆகியோர் அமைச்சரைச் சந்தித்து சங்கத்தின் நலன் சார்ந்த 5 கோரிக்கைகளுடன் கூடிய மனுவை அளித்தனர். அந்த கோரிக்கைகளை படித்து பரிசீலித்த அமைச்சர் அடுத்த ஒரு மாதத்துக்குள் அவற்றை நிறைவேற்ற தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.



முன்னதாக கடந்த வெள்ளியன்று தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் யுவராஜ், பொருளாளர் இரா.குமரேசன் சந்தித்து



மேற்படி கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்  மு.பெ சுவாமிநாதனைச் சந்தித்து அந்த மனுவை அளிக்கக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே இச்சந்திப்பு மிகத் துரிதமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

Movie Review : Virundhu

Movie Review : Jama

Web Series Review: Aindham Vedham