Prabhus Deva's Musasi first look poster out !



'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் படத்திற்கு 'முசாசி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அவருடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டார். 



அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் "முசாசி" ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் 'நடனப்புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். சவாலான போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். 



'முசாசி' என வித்தியாசமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ‘நடனப்புயல்’ பிரபுதேவாவின் தோற்றம், கம்பீரமாக இருப்பதால் இணையவாசிகளின் ஆதரவும், வரவேற்பும் எதிர்பார்ப்பை விட கூடுதலாக கிடைத்து வருகிறது.

Popular posts from this blog

Movie Review : Sirai

Movie Review : Parasakthi

Movie Review: Mahasena