நடிகர் அருண்விஜய்: “’சினம்’ படம் பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்!”

 


வித்தியாசமான மற்றும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் அருண் விஜய். சமீபத்தில் வெளியான அவரது ‘யானை’ திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதே இதற்கு சான்று. இந்த நிலையில் GNR குமரவேல் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் ‘சினம்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

தீவிரமான ஆக்ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் நடித்திருக்கும் அனுபவம் குறித்து நடிகர் அருண் விஜய் பகிர்ந்திருப்பதாவது, “கோபம் என்பது நம் அனைவரிடத்திலும் எதாவது ஒரு வடிவத்தில் இருக்கும். குறிப்பாக இன்றைய சமுதாயத்தில் எதாவது ஒரு கோபம் இருந்து கொண்டே இருக்கிறது. இது தவறு, அநியாயம் என கோபமடைந்தாலும் அதனால் எந்த பயனும் இல்லை என தெரிந்து விலகி செல்கிறோம். ‘சினம்’ படத்தின் மையக்கருவும் கிட்டத்தட்ட அது தான். கதாநாயகனை புறக்கணிக்க செய்யும் முரண்பாடுகளை எதிர்த்து போராடும் குணம் கொண்டவனாக இருப்பான்” என்பவர் தனது முந்தைய படங்களை விட இந்த படத்தில் நடிப்பிற்காக கூடுதல் உழைப்பை கொடுத்திருப்பதாக சொல்கிறார்.
மேலும் அவர் பேசும்போது, “இயக்குநர் குமரவேலன் இந்த கதையை என்னிடம் சொல்லிய போது, என்னுடைய
கதாபாத்திரத்தில் இருந்த தனித்துவத்தை என்னால் உணர முடிந்தது. என் கதாபாத்திரம் மட்டுமல்ல, கதையும் நன்றாகவே இருந்தது. ஆக்ஷன் காட்சிகளும் கதையோடு நன்றாக பொருந்தி போனது” என்கிறார்.

இயக்குநர் குமரவேலன் குறித்து அருண்விஜய் கூறும்போது, “இயக்குநராக அவரது திறமை அபாரமானது. திரைக்கதையாக இருப்பதை படமாக்கும் அவரது பார்வை உண்மையில் என்னை வியக்க வைத்தது. ஒரு தயாரிப்பாளராக இந்த படம் நன்றாக வந்திருப்பதில் எனது தந்தை விஜயகுமார் அவர்களுக்கு மகிழ்ச்சி. எமோஷன்ஸ், ஃபேமிலி ஆடியன்ஸ்க்கான விஷயங்கள், த்ரில்லர், ஆக்ஷன் என உலகம் முழுவதும் இருக்கும் பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.
படத்தின் கதாநாயகி பால் லால்வானி ஒரு டெடிக்கேட்டட் ஆர்டிஸ்ட். 

இயக்குநரது புத்திசாலித்தனமான பார்வைக்கு ஏற்ப பால் லால்வானி, தனது கதாப்பாத்திரதை புரிந்து கொண்டு அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ‘கார்கி’ படத்திற்கு பிறகு நடிகர் காளிதாஸ் கதாபாத்திரமும் நிச்சயம் இதில் பேசப்படும்” என்பவர் படம் பார்த்து முடித்ததும் ‘சினம்’ படம் பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்.
மூவிஸ் ஸ்லைட்ஸ் ப்ரைவேட் லிமிட்டட், ஆர். விஜயகுமார் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய், பால் லால்வானி, காளி வெங்கட், RNR மனோகர், KSG வெங்கடேஷ், மறுமலர்ச்சி
பாரதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Movie Review : Mathimaran

Film Review: 7G The Dark Story