பனாரஸ்’ படத்தில் இருந்து ‘பணம் முக்கியமில்லை’ என்ற பஞ்ச் லைனுடன் வெளியாகியுள்ள ட்ரால் பாடல்!


ஜெயந்திரா இயக்கத்தில், சயத் கான் மற்றும் சோனால் மாண்டெய்ரோ நடித்துள்ள பான் இந்தியா படமான ‘பனாரஸ்’ வருகிற நவம்பர் மாதம் 4ம்  தேதி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்போது ‘பனாரஸ்’ படத்தில் இருந்து ட்ரால் என தலைப்பிடப்பட்டுள்ள புதிய பார்ட்டி பாடல் வெளியாகியுள்ளது. அஜ்னேஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த பாடலை ஜெஸ்ஸீ கிஃப்ட் பாடியுள்ளார். ஜெஸ்ஸீ கிஃப்ட்டின் கிறங்கடிக்கும் குரல் பார்ட்டி பாடலுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளது. இளைஞர்கள் பார்ட்டியில் நிச்சயம் இந்த பாடலும் இனி இடம் பிடிக்கும். பாடலில் இடம்பெற்றுள்ள ‘பணம் முக்கியமில்லை’ என்ற பன்ச் லைன் இப்போது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் உள்ளது. 

’பனாரஸ்’ திரைப்படம் ஒரு புதிரான காதல் கதையை கொண்டது. படத்தின் புரோமோஷன் மற்றும் விளம்பர உத்திகள் மக்களிடையே படம் குறித்தான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது ட்ரால் பார்ட்டி பாடல் ‘லஹாரி’ யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பாடல் சையத் கானின் நடனத் திறமையை வெளிக்கொண்டு வந்திருப்பதுடன் கேட்பவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. பாங்காங்கில் ஒரு பெரிய கூட்டத்தில் இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது. யூடியூப் தளத்தில் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வரும் நாட்களில் யூடியூப் தளத்தில் நிச்சயம் இந்த பாடல் சாதனை படைக்கும்.


Popular posts from this blog

Movie Review : Virundhu

Movie Review : Jama

Web Series Review: Aindham Vedham